பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. சோழநாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் - (3) இந்தப் பயணத்தை சண்பைவேந்தர் மூன்று நிலை களில் மேற்கொள்ளுகின்றார். முதல்நிலை: திருமறைக்காட்டில் அப்பர் பெருமானைச் சோழநாட்டில் இருக்குமாறு சொல்லிவிட்டுத் தாம் மட்டிலும் பாண்டி நாட்டுக்குப் போவதாக ஏற்பாடு செய்தார் என்பதை நாம் அறிவோம். இங்கனம் மதுரை நோக்கிச் செல்லும்போது சில தலங்களை வழிபடுகின்றார். முதலில் அகத்தியான் பள்ளி' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். 'வாடிய வெண்டலைமாலை (2. 76) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி தலத்து இறைவனைச் சேவிக்கின்றார். 1. அகத்தியான் பள்ளி (அகஸ்தியாம் பள்ளி): திருத் துறைப்பூண்டி-கோடிக்கரை இருப்பூர்தி வழியில் கோடிக் கரைக்கு முன்புள்ள அகஸ்தியாம் பள்ளி நிலையத்திலிருந்து ; கல் தொலைவு. பார்வதி தேவியாருக்கு இமயமலையில் நடைபெற்ற திருமணத்தை அகத்தியர் இத்தலத்திலிருந்தே தரிசித்தார். கடற்கரைத்தலம். சம்பந்தர் பாடல் மட்டிலும் aు ఆఊ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/282&oldid=856219" இலிருந்து மீள்விக்கப்பட்டது