பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 ஞானசம்பந்தர் தலத்திற்கு எழுந்தருள்கின்றார். இத்தலத்து எம். பெருமானை மின்னியல் செஞ்சடை (3.11) என்ற முதற். குறிப்புடைய செந்தமிழ் மாலையால் வழிபடுகின்றார். பெருங்கடல் கஞ்சமு துண்டுகந்து பெருங்காட்டிடைத் திருந்திள மென்முலைத் தேவிபாட நடமாடிப்போய்ப் பொருந்தலர்தம் புரமூன்றும் எய்து புனவாயிலில் இருந்தவன் தன் கழல் - ஏத்துவார்கட் கிடரில்லையே. - (7). என்பது இந்த மாலையின் ஏழாவது வாடாத மனம்மிக்க நறுமலர். பின்னர் குலச்சிறையார் பிறந்த பதியாகிய மணமேற். குடியில் எழுந்தருள்கின்றார். இதனைச் சேக்கிழார் பெருமானே, பதிகிலவு பாண்டிகா டதனில் முக்கட் பரமனார் மகிழ்விடங்கள் பலவும் போற்றி விதிகிலவு வேதநூல் நெறியே ஆக்கி . வெண்ணிற்றின் சார்வினால் மிக்கு யர்ந்த கதியருளிக் காழிநகர் வாழ வந்தார் கண்ணுதலார் திருத்தொண்டர் பலரும் சூழ மதிகிலவு குலவேந்தன் போற்றிச் செல்ல மந்திரியார் பதிமணமேற் குடியில் வந்தார்.' என்று கூறுவர். பின்னர் சோழநாட்டுத் திருத்தலங்களை வழிபட்டுக் கொண்டு சீகாழியை வந்தடைகின்றார். இங்குச் சில நாட்கள் தங்கி ஓய்வு கொள்ளுகின்றார். இந்த விவரங்களை அடுத்த கட்டுரையில் விரித்துரைப்போம். 13. பெ.பு. ஞானசம்பந், 892.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/281&oldid=856217" இலிருந்து மீள்விக்கப்பட்டது