பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு 239 வாழை யம்பொழில் மந்திகள் களிப்புற மருவிய மாதோட்டக் கேழல் வெண்மருப் பணிந்தtள் மார்பர் கேதீச்சரம் பிரியாரே (6) என்பது இதன் ஆறாவது திருப்பாடல். இராமநாதனிடம் வி ைட .ெ ப ற் று க் கொண்டு திருவாடானை' வருகின்றார் பிள்ளையார். இத்தலத்துப் பெருமான் மீது மாதோர் கூறுகந்தேற (2.112) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடிச் சேவிக்கின்றார். வாடல் வெண்டலை அங்கை யேந்திகின்(று) ஆட லானுறை யா.ானை தோடு லாமவர் தூவிக் கைதொழ வீடு நுங்கள் வினைகளே. (2) என்பது இப்பதிகத்தின் இரண்டாவது திருப்பாடல். திருவாடானையிலிருந்து திருப்புனவாயில் ' என்ற திருத் 11. ஆடானை (திருவாடானை): காரைக்குடியிலிருந்து 32 கல் தொலைவு. பேருந்து வசதி உண்டு. தொண்டிக்குச் செல்லும் பேருந்தில் ஏறவேண்டும். ஒரு முனிவரின் சாபத்தால் ஆட்டுத் தலையும் ஆனை உடலும் பெற்ற தேவகுமாரன். ஒருவன் இங்கு வழிபட்டு மீண்டும் தேவ உடல் பெற்றதால் ஆடானை தலப் பெயராயிற்று. 12. புனவாயில் (திருப்புனவாயில்): காரைக்குடி. மயிலாடுதுறை இருப்பூர்தி வழியில் அறந்தாங்கி நிலையத் திலிருந்து 22 கல் தொலைவிலுள்ள மீமிசல் போய் அங்கிருந்து 7 கல் தொலைவு மாட்டுவண்டியில் சென்றால் இத் தலத்தை அடையலாம். ஆடானையிலிருந்து 12 கல் தொலைவு சென்றாலும் இத்தலத்தை அடையலாம். கடற்கரைத் தலம். மூலத்தான இலிங்கம் பெரிது. ஆவுடை யாரைச் சுற்றியுடுத்த 30 முழம் நீளமுள்ள பரிவட்டம் தேவை. தஞ்சை பெரிய கோயில் பிருஹதேசுவரர் நினைவுவரும். #

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/280&oldid=856215" இலிருந்து மீள்விக்கப்பட்டது