பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.238 - ஞானசம்பந்தர் இணைமலர் மேலன்னம் வைகுகானல் இராமேச்சுர மேயார் அணையினை புல்கு கரந்தைசூடும் அடிகள் செயும் செயலே. (6) என்பது ஆறாவது நறுமலர். மன்னனாகிய இராமன் இராமேச்சுரத்தில் சிவபெருமானைப் பூசனை புரிந்த தொன்மை வரலாற்றினை அமைத்துத் திருப்பதிகம் பாடி இறைவனை வழிபட்டு அடியார்களுடன் அத்தலத்தில் தங்கி யிருக்கின்றார், பாண்டிமாதேவியும் குலச்சிறையாரும் அடியார்கள் திருவமுது செய்தற்கு வேண்டிய ஏற்பாடு களைச் செய்கின்றனர். இராமேச்சுரத்திலிருக்கும்போதே பிள்ளையார் ஈழ மண்டலத்திலுள்ள திருக்கோணமலை, மாதோட்டக் கேதிச் சரம் ஆகிய சிவத்தலங்களை நினைந்து திருப்பதிகங்கள் பாடிப் பணிந்து போற்றுகின்றார். திரைகழலரவம் (3.123) என்ற முதற் குறிப்பினையுடைய பதிகம் திருக்கோணமலை பழித்திளங் கங்கை சடையிடை வைத்துப் பாங்குடை மதனனைப் பொடியா விழித்தவன் தேவி வேண்டமுன் கொடுத்த விமலனார் கமலமார் பாதர் தெழித்துமுன் னரற்றும் செழுங்கடல் தாளஞ் செம்பொனும் இப்பியும் சுமந்து கொழித்துவன் திரைகள் கரையிடைச் சேர்க்கும் கோணமாமலையமர்ந் தாரே. (4) என்பது இப்பதிகத்தின் நான்காவது திருப்பாடல். விருது குன்றமா மேருவில் (2.107) என்ற முதற்குறிப்புடைய பதிகம் மாதோட்டக்கேதீச்சரம் பற்றியது. பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் பொருந்தவைத் தொருபாகம் மாழையங்கயற் கண்ணிபா லருளிய பொருளினர் குடிவாழ்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/279&oldid=856211" இலிருந்து மீள்விக்கப்பட்டது