பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தல வழிபாடு 237 செந்தமிழ் மாலைகளால் வழிபடுகின்றார். அலைவளர் தண்மதி (3.10) என்ற முதற்குறிப்புடையது முதல் மாலை. தேவியை வவ்விய தென்னிலங்கைத் தசமாமுகன் பூவிய லும்முடி பொன்றுவித்த பழிபோயற ஏவிய லுஞ்சிலையண்ணல் செய்தவி ராமேச்சுரம் மேவிய சிந்தையி னார்கள்தம்மேல் வினைவீடுமே. (2), என்பது இந்த மாலையின் இரண்டாவது வாடா நறுமலர், திரிமருமாமணி (3.101) என்ற முதற்குறிப்புடையது. இரண்டாவது மாலை. இதில், கணையினை வெஞ்சிலை கையிலேந்திக் காமனைக் காய்ந்தவர்தாம் இணைபினை நோக்கி கல்லாளொடாடும் இயல்பினர் ஆகிநல்ல இஃது ஒரு தீவிலுள்ளது. சில ஆண்டுகட்கு முன்னர்" இராமேஸ்வரத்திலிருந்து நேரே தனுஷ்கோடி தீர்த்த கட்டத்திற்கு இருப்பூர்தி சென்றது. மணல் காற்றி னால் இருப்பூர்தி வழி துரர்ந்து போவதைத் தடுப் பதற்குப் பெரும்பொருள் செலவழிவதால், இப்போது வண்டி போவதில்லை. இராமேஸ்வரத்திலிருந்து இப்போது (அப்போதும் கூட) தீர்த்த கட்டம் வரையில் படகில் போக. லாம். காசிப் பயணத்தில் கொண்டுவரும் கங்காதீர்த் தத்தை இராமலிங்க சுவாமிக்குத் திருமுழுக்காட்டி காசிப் பயணத்தை முடிப்பது மரபு. நிரம்ப அழகிய தேசிகர் இயற்றிய சேதுப்புராணம் இத்தலத்திற்கு உண்டு. அம்பிகை அழகும் அருளும் நிரம்பிய பர்வதவர்த்தினி (மலைவளர் காதலி). தாயுமானவர் பாடல் அம்மையின் சிறப்பை விளக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/278&oldid=856210" இலிருந்து மீள்விக்கப்பட்டது