பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 ஞானசம்பந்தர் பெருமானை மருந்தவை மந்திரம் (3.92) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பாமாலையால் வழிபடுகின்றார் சிவக்கன்று. ஏனவெண் கொம்பொடு மெழில்திகழ் மத்தமும் இளஅரவும் கூணல்வெண் பிறைதவழ் சடையினர் கொல்புலித் தோலுடையார் ஆனினல் லைந்துகங் தாடுவர் பாடுவ ரருமறைகள் தேனில்வண் டமர்பொழில் திருநெல் வேலியுறை செல்வர்தாமே. (5) என்பது இத்திருமாலையில் ஐந்தாவது வாடா நறுமணம் மிக்க நல்மலர். - நெல்லையப்பனிடம் விடை பெற்றுக்கொண்டு இராமேச் சுரம்' வந்து சேர்கின்றார். இராமலிங்கரை இரண்டு வெள்ளச் சேதமின்றிச் சிவபெருமான் நிவேதனத்துக்குச் சேமிக்கப் பெற்ற நெற்களஞ்சியத்தை வேலிகட்டிக் காத் தமையால் நெல்வேலி என்று தலப்பெயராயிற்று. நடராசர் ஐந்து சபைகளுள் இங்குள்ளது தாமிரசபை எனும் செப் பறை. சுவாமி சந்நிதிக்கெதிரில் ஏழிசை ஒலி எழும்பும் கருங்கல் தூண்கள் உள்ளன. ஒரு சிறுகோலால் தட்டிக் கேட்கலாம். அம்மை காந்திமதியின் திருவுருவம் அழகும் அருளும் நிரம்பியது. ஆற்றின் நடுவிலுள்ள குறுக்குத் துறை முருகன் கோயில் சிறப்புடையது. மதுத்திவலை, சிந்து பூந்துறை கமழ் திருநெல்வேலி (3.92:8) என்று பாசுரத்தி லுள்ளதை யொட்டி ஆற்றங்கரையிலுள்ள ஓர் ஊர்ப்பகுதி சிந்துபூந்துறை என்று இன்றும் வழங்கப்பெறுகின்றது. 10. இராமேச்சுரம் (இராமேஸ்வரம்): மானாமதுரைஇராமேஸ்வரம் இருப்பூர்தி வழியில் இராமேஸ்வரம் என்ற நிலையத்திலிருந்து 1 கல் தொலைவு. கடற்கரைத்தலம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/277&oldid=856207" இலிருந்து மீள்விக்கப்பட்டது