பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 - ஞானசம்பந்தர் ஐயாற்றிறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு கழுமலம் வந்தணைகின்றார். காழியம் பதியிலுள்ள மறையவர் மகிழ்ந்து எதிர்கொள்ளுகின்றனர். பிள்ளையார் சிவிகையிலிருந்து இறங்கித் திருத்தோணிபுரக் கோயிலை யடைந்து மாதொரு பாகனார் மலரடி பணிகின்றார். கழுமலத்திறைவன்மீது உற்றுமை சேர்வது' (3.113) என்ற முதற்குறிப்புடைய திருவியமகப் பதிகத்தை உவகையால் எடுத்தோதுகின்றார். இதில், உற்றுமை சேர்வது மெய் யினையே; யுணர்வது கின்னருள் மெய்யினையே; கற்றவர் காய்வது காமனையே; கனல்விழி காய்வது காமனையே; அற்ற மறைப்பது முன்பணியே: . அமரர்கள் செய்வது முன்பணியே: பெற்று முகந்தது கந்தனையே பிரமபுரத்தை யுகங்தனையே. (1) என்பது முதல் திருப்பாடல். இப்பதிகத்தின் திருக்கடைக் காப்பில், பருமதில் மதுரை மன்னவை யெதிரே பதிகம தெழுநிலை யவையெதிரே வருகதி யிடைமிசை வருகரனே வசையொடு மலர்கெட வருகரனே. - என்ற அடிகளில் 'மதுரை மன்னவனாகிய பாண்டியனது பேரவையின் முன்னர்த் திருப்பதிகம் எழுதப்பெற்ற ஏடு நதியின்மீது எதிரேறிச் செல்லுதற்கு அருளிய இறைவனே! என்று பிரமபுரத்திறைவனைப் போற்றி மகிழ்தலைக் காணலாம். பின்னர்த் தம்மைப் பிரியாது உடன் வரும் திருநீலகண்ட யாழ்ப்பாணரை விறலியாருடன் அவரது மாளிகை செல்லப் பணிக்கின்றார்; தம்மைப் பெற்றெடுத்த அன்னையார் மகிழ்ந்து எதிர்கொள்ளத் தமது திரு மாளிகையில் சென்று அமர்ந்து ஒய்வு கொள்ளுகின்றார் .காழிப்பிள்ளையார். - w ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/295&oldid=856250" இலிருந்து மீள்விக்கப்பட்டது