பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. நடுநாட்டுத் தல வழிபாடு கடுநாட்டுத் தி ரு த் த ல ங் க ள் இருபத்திரண்டு. பாணருடன் பயணம் செய்யும்போது எருக்கத்தம்புலியூர், பெண்ணாகடம், நெல்வாயில் அரத்துறை, நெல் வெண்ணெய், முதுகுன்றம் ஆகிய ஐந்து தலங்களின் வழி பாடு நிறைவு பெற்று விடுகின்றது. தொண்டை நாட்டுத் திருத்தலப் பெரும் பயணத்தைத் தொடங்கும்போது பெரும் பாலான நடுநாட்டுத் தலவழிபாடு நிறைவு பெறுகின்றது. சீகாழிப் பதியிலிருந்து புறப்பட்டுத் தில்லைக் கூத்தப் பெருமானைப் பணிந்து பயணத்தைத் தொடங்குகின்றார் பிள்ளையார். இதனைச் சேக்கிழார் பெருமான், செல்வம் மல்கிய தில்லைமூ தூரினில் திருகடம் பணிந்தேத்திப் பல்பெ ருந்தொண்டர் எதிர்கொளப் பரமர்தங் திருத்தினை நகர்பாடி அல்கு தொண்டர்கள் தம்முடன் திருமாணி குழியினை அணைந்தேத்தி மல்கு வார்சடை யார்திருப் பாதிரிப் புலியூரை வந்துற்றார்.' என்று எடுத்துக்காட்டுவார். இவர் குறிப்பிட்டவாறு முதலில் தினைநகர் வருகின்றார். *தினைநகர் பாடி’ 1. பெ. பு: ஞானசம்பந். 962. 2. தினைநகர் (தீர்த்தகிரி): கடலூர்-சிதம்பரம் இருப் பூர்தி வழியில் ஆலப்பாக்கம் என்ற நிலையத்திலிருந்து 5 கல் தொலைவு. நம்பியாரூரர் மட்டிலும் இத்தலத் தைப் பாடியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/296&oldid=856252" இலிருந்து மீள்விக்கப்பட்டது