பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 - ஞானசம்பந்தர் என்று சேக்கிழார் பாடினாலும் பதிகம் கிடைக்கவில்லை; அடங்கன்முறையில் பதிகம் காணப்பெறவில்லை. தினை நகர்ப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு கோபுரம்3 வருகின்றார். வெங்கணானை" (1.31) என்ற முதற்குறிப் புடைய செந்தமிழ் மாலையால் வழிபடுகின்றார். இதில், குற்றமின்மை உண்மைஎேன்றுன் அடியார் பணிவார் கற்றகேள்வி ஞானமான காரணம் என்னைகொலாம் வற்றலாமை வாளரவம் பூண்டயன் வெண்டலையில் துற்றலான கொள்கையானே சோபுர மேயவனே. (7), என்பது ஏழாவது வாடா நறுமலர். சோபுர ஈசனிடம் விடைபெற்றுக் கொண்டு மாணிகுழி: வருகின்றார் பிள்ளையார். 'பொன்னியல் பொருப்பரையன்' (3.77) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகத்தால் தலத் திறைவனை வழிபடுகின்றார். 3. சோபுரம் (தியாகவல்லி): ஆலம்பாக்கம் என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு. உப்பங் கழியைப் படகேறிக் கடக்க வேண்டும். கோயில் மணல் மூடியிருந்து சென்ற நூற்றாண்டில் அகழ்ந்தெடுக்கப் பட்டது. சம்பந்தர் மட்டிலுமே இத்தலத்தைப் பாடி யுள்ளார். 4. மாணிகுழி (திருமாணிகுழி): கடலூர் (புதுநகரம்). என்ற இருப்பூர்தி நிலையத்திலிருந்து 3; கல் தொலைவு. இத்தலத்திற்குப் போகும் வழியில் திருவயிந்தபுரம் என்ற திருமால் தலம் உள்ளது. திருமால் வாமனாவதாரத்தில் (=மாணி) பூசித்ததை 3.77:4: பாசுரம் கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/297&oldid=856254" இலிருந்து மீள்விக்கப்பட்டது