பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் தல வழிபாடு 257 மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வ மனமாய் வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்ட னிடமாம் சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டு கெடிலம் உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணி குழியே. (6) (கெடிலம்-கெடிலநதி) என்பது ஆறாவது வாடா நறுமண மலர். பாடல்களில் இயற்கைவளம் மிக அழகாகச் சித்திரிக்கப்படுகின்றது. மாணிகுழிப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு திருப்பாதிரிப்புலியூர் வருகின்றார் சம்பந்தப் பெருமான். முன்ன கின்ற (2.121) என்ற முதற் குறிப்புடைய செந் தமிழ் மாலையால் பாதிரிப்புலியூர்ப் பெருமானை வழிபடு கின்றார். 5. பாதிரிப்புலியூர் (திருப்பாப்புலியூர்): திருப்பா புலியூர் இருப்பூர்தி நிலையத்திலிருந்து கல் தொலைவு. கடற்கரைத்தலம். கெடிலநதியின் தென்கரையிலுள்ளது. புலிக்கால் முனிவர் (வியாக்ரக பாதர்) பாதிரி மரத்தின் கீழிருந்த சிவலிங்கத்தைப் பூசித்தமையால் பாதிரிப்புலியூர் எனத் தலப்பெயர் வழங்குகின்றது. மல்கணர் என்ற முனிவர் சாபத்தால் பெற்ற முடக்கால் முயல் உருவில் பூசித்து அவ்வுரு நீங்கப்பெற்ற வரலாற்றுக் குறிப்பை 2.121:1 என்ற பாசுரம் கூறும். கல்லிற் பூட்டிக் கடலில் பாய்ச்சப்பெற்ற அப்பர் சுவாமிகள், அக்கல்லையே தெப்ப மாகக் கொண்டு ஐந்தெழுத்தோதிக் கரையேறிய இத் தலத்தின் பகுதி கரையேறவிட்டகுப்பம் என வழங்கப் பெறுகின்றது. இது வண்டிப்பாளையம் என்று இப்போது வழங்குகின்றது. இந்த இடத்தில் சித்திரை மாதம் அனுட நாளன்று திருநாவுக்கரசர் சம்பந்தமான கரையேறவிட்ட 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/298&oldid=856256" இலிருந்து மீள்விக்கப்பட்டது