பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 ஞானசம்பந்தர் போரதினாலும் புகையாலும் உய்த்தே அடியார்கள்தாம் போதினாலே வழிபாடுசெய்ய புலியூ ரதனுள் ஆதிகாலும் வலமிலாத அடிகள்மறை ஓதிகாளும் இடும்பிச்சை ஏற்றுண் டுணப்பாலதே (4) என்பது நான்காவது நறுமலர். சம்பந்தர் அப்பர் பெருமானிடம் நட்புக் கொண்ட பிறகுதான் திருப்பர்திரிப் புலியூருக்கு வருகின்றார். இதுதான் அப்பர் காலத்தில் பாடலிபுரம் என்ற பெயரால் வழங்கியது. தமிழ்நாட்டுச் சமணரின் குருபீடத்தானமாகவும் நிலவியது. சமணப் பெரும்பள்ளிகள், கல்வி நிலையங்கள், மடங்கள் எல்லாம் இங்கு நிரம்பியிருந்தன. அப்பர் பெருமான் தருமசேனர். என்ற சமண சந்நியாசி வாழ்க்கையைக் கழித்த இடம் இதுவேயாகும். இவற்றையெல்லாம் பிள்ளையார் அப்பர் பெருமான் மூலம் அறிந்திருக்க வேண்டுமாதலால், பிள்ளையார் இவற்றைப்பற்றியெல்லாம் இங்கு வந்த போது சிந்தித்திருக்க வேண்டும். பாதிரிப்பூர் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு வடுகூர் வருகின்றார். 'சுடுக.ரெரிமாலை (1.87) என்ற திருப்பதிகம் பாடி வடுகூர் அடிகளை வழிபடுகின்றார். விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. கெடிலநதி இந்த வழியாகத்தான் பாய்ந்தது என்றும் பின்னர் வழி மாறிப்போனது என்றும் சொல்வர். இங்கு நாவுக்கரசரின் நினைவாக ஒரு குளம், ஒரு படித்துரை, ஒரு மண்டபம் இப்போது அமைக்கப் பெற்றுள்ளன. 6. வடுகூர் (ஆண்டார் கோயில்): விழுப்புரம்.பாண்டிச் சேரி இருப்பூர்தி வழியில் உள்ள சின்னபாபு சமுத்திரம் என்ற நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு. சம்பந்தர் மட்டிலும் இத்தலத்தைப் பாடியுள்ளார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/299&oldid=856258" இலிருந்து மீள்விக்கப்பட்டது