பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் தல வழிபாடு 259, தளரும் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக் கிளரும் அாவார்த்துக் கிளரும் முடிமேலோர் வளரும் பிறைசூடி வரிவண் டிசையாட ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே. (6) என்பது ஆறாவது திருப்பாடல். வடுகூரிலிருந்து வக்கரை என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். (இது தொண்டை நாட்டுத் திருத்தலங்கள் 32 இல் ஒன்று). கறையணி மாமிடற்றான்" (3.60) என்ற முதற் குறிப்பினையுடைய செந்தமிழ் மாலையால் வக்கரை இறைவனை வழிபடுகின்றார். கார்மலி கொன்றையொடுங் கதிர்மத்தமும் வாளரவும் நீர்மலி யுஞ்சடைமேல் கிரம்பாமதி சூடிகல்ல 7. வக்கரை (திருவக்கரை): சென்னை - விழுப்புரம் இருப்பூர்தி வழியில் உள்ள மயிலம் நிலையத்திலிருந்து 12_கல் தொலைவு. மயிலம் நிலையத்திலிருந்து மயிலம் சென்று அங்கிருந்து புதுச்சேரி செல்லும் வழியில் 4 கல் தொலைவு சென்ற பிறகு எரையூர் நெமிலி வழியாக 5 கல் தொலைவு சென்றால் இத்தலத்தை அடையலாம். வக்கரை யிலுள்ள கருங்கற்கள் மரங்களைப்போல் தோன்றும். மூலத்தான இலிங்கம் மூன்று முகம் உடையது. நடராசர் வக்ர தாண்டவமூர்த்தி. சம்பந்தர் மட்டிலுமே இத் தலத்தைப் பாடியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/300&oldid=856262" இலிருந்து மீள்விக்கப்பட்டது