பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 ஞானசம்பந்தர் வார்மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன் பார்மலி வெண்டலையிற் பலிகொண்டுழல் பான்மையனே. (6) என்பது ஆறாவது வாடா நறுமலர். வக்கரை இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு. இரும்பை மாகாளம் என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். இதுவும் தொண்டை நாட்டுத் தலமாகும். மண்டு கங்கை (2.117) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி இத்தலத்து எம்பெருமானை வழிபடுகின்றார். வெந்தறுேம் எலும்பும் அணிந்த விடையூர்தியான் எந்தைபெம்மானிட்ம் எழில்கொள் சோலை இரும்பைதனுள் கந்தமாயபல வின்கனிகள் கமழும் பொழில் மந்தியேறிக் கொணர்ந்துண் டுகள்கின்ற மாகாளமே. (3) என்பது இத்திருப்பதிகத்தின் மூன்றாவது திருப்பாடல். இரும்பை மாகாளத்திலிருந்து புறப்பட்டு திருவதிகை . வருகின்றார். பிள்ளையார் திருவதிகைக்கு எமுந்தருள் 8. இரும்பை மாகாளம் (இரும்பை): புதுச்சேரியி விருந்து 5 கல் தொலைவு. சம்பந்தர் மட்டிலுமே இத்தலத்தைப் பாடியுள்ளார். -y 9. அதிகை வீரட்டானம் (திருவதிகை): பண்ணுருட்டி இருப்பூர்தி நிலையத்திலிருந்து 2 கல் தொலைவு. சிவத் தலங்களுள் அதிகப்பட்டது (மேம்பட்டது) அதிகா, அதிகை. பழைய பல்லவச் சிற்ப முறையில் கோயிலும் இலிங்கமும் அமைந்திருக்கும் கிறப்பை நேரில்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/301&oldid=856264" இலிருந்து மீள்விக்கப்பட்டது