பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் தல வழிபாடு 261 வதை முன்னமே கேட்டறிந்த சிவனடியார்கள் அவரை எதிர்கொண்டு வரவேற்கின்றனர். திருவதிகை வீரட்டானத் திறைவர் பூதம்பாட நின்றாடும் தமது ஆடற் கோலத்தைப் பிள்ளையாருக்குக் காட்டருளுகின்றார். அத் தெய்வச் காட்சியைக் கண்டு உளம் உருகிய காழிவேந்தர் குண்டைக் குறட்பூதம் (146) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடிப் போற்றுகின்றார். ஆடல் அழல்காக மரைக்கிட் டசைத்தாடப் பாடல் மறைவல்லான் படுதம் பலிபெயர்வான் மாட முகட்டினமேல் மதிதோய் அதிகையுள் வேடம் பலவல்லான் ஆடும்வீரட் டானத்தே {3} என்பது மூன்றாம் திருப்பாடல். பிள்ளையார் திருவதிகைப் போந்தபோது அப்பர் பெருமானுக்காக வீரட்டானத் திறைவர் நிகழ்த்திய அற்புதச் செயல்கள், திலகவதியாரின் திருத்தொண்டு ஆகியவற்றையும் பிள்ளையார் நினைந்து பார்த்திருக்க வேண்டும். திலகவதியாரையும் சந்தித்து உரையாடியிருக்க வேண்டும். ஆனால் சேக்கிழார் பெருமான் இதுபற்றிய குறிப்பே தரவில்லை. அநுபவிக்கவேண்டும். அப்பர் சுவாமிகட்குத் தொல்லை கொடுத்து, கடைசியில் சைவனாகிய பல்லவன் சமணர் பாழிகளை இடித்து, அக்கற்களைக் கொண்டே கட்டிய குணபதேசுவரம் வீரட்டேசுவரர் கோயிலுக்கருகில் உள்ளது. இவருக்குச் சூலைநோய் நீக்கி நாவுக்கரசு' என்ற பட்டம் அளித்தவர் வீரட்டேசரே. அப்பரும் திலகவதி யாரும் சரியைத் தொண்டு செய்த அருமைத்தலம். சுந்தரருக்குத் திருவடி தீட்சை செய்த சித்தவட மடம் கோயிலின் தெற்கு வீதியிலுள்ளது. அருகில் கெடில நதி ஓடுகின்றது. திரிபுர தகன உற்சவம் சித்திரைப் பெருவிழாவில் திருத்தேரோட்டத்தன்று நடைபெறு கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/302&oldid=856266" இலிருந்து மீள்விக்கப்பட்டது