பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 ஞானசம்பந்தர் திருவதிகையிலிருந்து திருவாமாத்தூர் வருகின்றார் சண்பைவேந்தர். இரண்டு பதிகங்களால் பிள்ளையார் ஆமாத்துரர் இறைவனை வழிபடுகின்றார். முதல் பதிகம் "குன்றவார்சிலை (250) என்ற முதற் குறிப்பையுடையது. இதில், மங்கை வாணுதல் மான்மனத்திடை வாடியூட மணங்க மழ்சடைக் கங்கையாள் இருந்த கருத்தாவ தென்னைகொலாம் பங்கய மதுவுண்டு வண்டிசை பாட மாமயில் ஆடவிண்முழ வங்கயைா லதிர்க்கும் ஆமாத்து ரம்மானே. (7) என்பது ஏழாவது பாடல். இரண்டாவது பதிகம் துன்னம் பெய் (244) என்ற முதற்குறிப்புடையது. இதில், கோணாகப் பேரல்குல் கோல்வளைக்கை மாதராள் பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும் ஆணாகங் காதல்செய் ஆமாத்து ரம்மானைக் காணாத கண்ணெல்லாம் காணாத கண்களே. (4) 10. ஆமாத்துனர் (திருவாமாத்துார்): விழுப்புரம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 4 கல் தொலைவிலுள்ளது. இஃது-அப்ாக இக திருவளதரித்திரதல்ம். கோயில் தன்னந் தனியாக உள்ளது. இறைவன், பசுபதீசுவரர்; இறைவி, திரிபுரசுந்தரி, 16 குருடர்கள் நாடோறும் கோயிலில் திருப்பதிகம் விண்ணப்பிக்கவும் (= தேவாரம் ஒதவும்) அவர்கட்குக் கண் காட்டுவார் இருவர் (=விழிப் பார்வையுடைய வேறு இருவர்) வழித்துணையாக அவர் களைக் கையிற் பிடித்து நடத்திச் செல்லவும் திட்டம் செய்யப்பெற்றதை ஒரு கல்வெட்டு கூறுகின்றது. இத் தலத்து இறைவனை இராமபிரான் வழிபட்டதை 5:44:5 (அப்பர்) பாசுரம் கூறும். இத்தலத்து அப்பர் பாசுரங்கள் சிலவற்றில் (6-9 பதிகம் காண்க) இறைவன் அழகியரே ?變酵醇癮**

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/303&oldid=856268" இலிருந்து மீள்விக்கப்பட்டது