பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுநாட்டுத் தல வழிபாடு 263 'து நான்காவது பாடல். பிள்ளையார் ஆமாத்தாரி லிருக்கும் போது அப்பர் பெருமானின் பிறப்பு, வளர்ப்பு, இளமைச் செயல்கள், மதமாற்றம் முதலியவற்றைச் சிந்தித்திருக்க வேண்டும். சிருவாமாத்தூர் இறைவனிடம் விடை பெற்றுக் பிசாண்டு திருக்கோவலுர் வருகின்றார். படை கொள் கூற்றம் (2.100) என்ற முதற்குறிப்புடைய பதிகம் பாடி. வீரட்டானரைப் போற்றுகின்றார். இதில், உரையும் பாட்டும் தளர்வெய்தி உடம்பு மூத்த போதின்கண் கரையும் திரையும் கண்டெழ்கி நகுவர் கமர்களாதலால் வரைகொள் பெண்ணை வந்துலா வயல்கள் சூழ்ந்த கோவலூர் விரைகொள் சீர்வெண் ணிற்றினை வீரட் டாணஞ் சேர்துமே. (7) என்பது ஏழாவது பாடல். ஒவ்வொரு பாடலிலும் மூன்றாவது நான்காவது அடிகளில் இயற்கை வருணனை என வழங்கப் பெற்றிருப்பதற்கேற்பக் கல் வெட்டுகளிலும் அழகிய நாயனார் எனற பெயர் காணப்படுகின்றது. இஐ அ ஆஆஜாமேசுவரர் என்கின்றனர். 11. கோவலூர் வீரட்டம் (கீழுர்): விழுப்புரம்-காட்பாடி இருப்பூர்தி வழியில் திருக்கோயிலூர் நிலையத்திலிருந்து 1 கல் தொலைவிலுள்ளது. பெண்ணையாற்றின் தென்கரை யிலுள்ளது. அந்தகாசுரனைச் சங்கரித்த வீரட்டம். மெய்ப்பொருள் காயனார் அரசு புரிந்து முத்தியடைந்த தலம். முதலாழ்வார்கள் மூவரும் சேர்ந்து முகுந்தனைத் துதித்த இடமும் இவ்வூரே. திருமால் கோயில் திரிவிக்கிரமன் பெரும் புகழ் பெற்றவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/304&oldid=856270" இலிருந்து மீள்விக்கப்பட்டது