பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 ஞானசம்பந்தர் காணலாம். நாலாயிரத்தில் ஆழங்கால் பட்டவர்கள் திருக்கோவலூர் மங்களாசாசனத் திருமொழியின் பாடல் களிலும் மூன்றாவது நான்காவது அடிகளில் தலத்து வளம் சித்திரிக்கப் பெற்றிருப்பதை நினைவு கூரத் தவறார்கள்.” விரட்டப் பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு அறையணி நல்லூர்' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். இத்தலத்து இறைவனை பீடினாற் பெரியோர்களும் (2.77) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ் மாலையால் வழி படுகின்றார். இதில், விரையி னார்கொன்றை சூடியும் வேக நாகமும் வீக்கிய அரையி னாரறை யணிகல்லூ சண்ண லாரழ காயதோர் கரையி னார்விடை யூர்தியார் நக்க னார்ங்றும் போதுசேர் உரையி னாலுயர்ந் தார்களும் உரையி னாலுயர்ந் தார்களே. (6) என்பது தமிழ் மணங்கமழும் ஆறாவது வாடா நறுமர். 12. பெரி - திரு. 2:10, காண்க. 13. அறையணி கல்லூர் (அறகண்ட நல்லூர்): திருக்கோயிலூர் இருப்பூர்தி நிலையத்திலிருந்து கல் தொலைவு. நிலையத்திற்கு அருகில் உள்ளது. கற்பாறை யில் குடையப் பெற்ற குகைக்கோயில் வேறொன்றுள்ளது. மலை மேல் வலம் வரும்போது ஓரிடத்தில் நின்று பார்த்தால் திருஅண்ணாமலை நன்கு தெரியும். அன்பர்கள் இதனைக் காட்டக் கண்ட காழிப்பிள்ளையார் இங்கிருந்தவாறே உண்ணமுலை உமையாளொடும் (1.10) எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினதாக வரலாறு. சம்பந்தர் பாடல் மட்டுமே கொண்ட தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/305&oldid=856272" இலிருந்து மீள்விக்கப்பட்டது