பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 273 என்பது நான்காம் திருப்பாடல். அடுத்து, அறப்பெருஞ் செல்வக் காமக் கோட்டத்திற்கு வந்து காமாட்சி அம்மையை வழிபட்டு மீண்டும் ஏகம்பம் சென்று மூன்று செந்தமிழ் மாலைகளால் வழிபடுகின்றார். பாயும் விடை’ (3,114) என்ற முதற்குறிப்புடையது முதல் செந்தமிழ் மாலை. இதில், வேட னாகி விசயற் கருளியே: வேலை கஞ்ச மிசையற் கருளியே: ஆடு பாம்பரை ஆர்த்த துடையதே; அஞ்சு பூதமும் ஆர்த்த துடையதே: கோடு வான்மதிக் கண்ணி யழகிதே; குற்ற மின்மதிக் கண்ணி யழகிதே: காடு வாழ்வதி யாவது மும்மதே: கம்ப மாபதி யாவது மும்மதே. (5) என்பது ஐந்தாவது வாடா நறுமலர். அடுத்த மாலை கருவார் கச்சி (3.41) என்ற முதற்குறிப்புடையது. இச் சிறு மாலையில், - படமார் கச்சி இடமே கம்பத் துடையா யென்ன அடையா வினையே. . (5) என்பது நறுமணம் மிக்க ஐந்தாவது தமிழ்மலர். மூன்றாவது மாலை வெந்த வெண்பொடி (1.133) என்ற முதற்குறிப் புடையது. . தோட னிம்மலர்க் கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து பாடல் நான்மறை யாகப் பல்கணப் பேய்க ளவைசூழ வாடல் வெண்டலை யோடன லேந்தி மகிழ்ந்துட னாடல்புரி சேடர் சேர்கலிக் கச்சி ஏகம்பஞ் சேர இடர்கெடுமே. (5) 18 ->

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/314&oldid=856291" இலிருந்து மீள்விக்கப்பட்டது