பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 ஞானசம்பந்தர் குரங்கணில் முட்டத் திறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு காஞ்சி திருவேகம்பம் வருகின்றார் காழிப் பிள்ளையார், மறையானை (2.12) என்ற முதற்குறிப் புடைய திருப்பதிகத்தால் வழிபடுகின்றார். இதில், குன்றேய்க்கு நெடுவெண்மாடக் கொடிகூ டிப்போய் மின்றேய்க்கு முகில்கள் தோயும் வியன்கச்சியுள் மன்றேய்க்கு மல்கு சீரான் மலியே கம்பம் சென்றேய்க்கும் சிந்தையார் மேல்வினை சேராவே. - (4), (மேல்வினை-வருவினை) 5. கச்சி ஏகம்பம் (ஏகாம்பரேசுவரர் கோயில்): செங்கல்பட்டு-அரக்கோணம் இருப்பூர்தி வழியில் உள்ள காஞ்சிபுரம் என்ற நிலையத்திலிருந்து 1 கல் தொலைவு. ஐயடிகள் காடவர்கோன், மறவாது கல் எறிந்த சாக்கியர், திருக்குறிப்புத் தொண்டர் முத்தி பெற்ற தலம். என்றும் அழியாத மாவடியின் கீழ் இருத்தலால் ஏகாம்பரன். ஆயினன் (ஏக ஆம்பரன்-ஒருமாவின் கீழ் இருப்பவன்). காஞ்சிப்பதியிலுள்ள தேவார வைப்புத்தலங்கள் பல தளிகள் வரலாற்றைக் காஞ்சி புராணத்தில் காணலாம். மூலத்தானம் மணலாதலால் அபிடேகம் இல்லை. புனுகுச் சட்டமே சாத்தப் பெறுவது. ஆவுடையாருக்கே அபிடேகம். காஞ்சிபுரத்திலுள்ள சிவாலயங்கட்கு அம்மன் சந்நிதியே இல்லை, இவ்வாலயங்களிலுள்ள சிவபெருமானுக்கு அ ம் பி ைக காமாட்சியம்மையாகத் தனிக்கோயிலில் உள்ளார். பஞ்சபூதங்களுள் மணல் இலிங்கமுள்ள இத். தலம் பிருதிவித்தலம். கண்ணிழந்த சுந்தரர் இத்தலத்தில் இடக்கண் பெற்றார். முத்திதரும் நகரங்கள் ஏழனுள் இஃது ஒன்று. இலக்கியச் சிறப்பும் சாத்திரச் சிறப்பும், கொண்ட தலம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/313&oldid=856289" இலிருந்து மீள்விக்கப்பட்டது