பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 27; முதற்குறிப்புடைய செந்தமிழ் மாலையால் இத்தலத்து எம்பெருமானை வழிபடுகின்றார். - துஞ்சுருறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்க ழனிவாய் மஞ்சுமலி பூம்பொழினின் மயில்கள் நட மாடல்மலி மாகறலுளான் வஞ்சமத யானையுரி போர்த்து மகிழ் வானொர்மழு வாளன் வளரும் கஞ்சமிருள் கண்டமுடை காதனடி யாரை கலியா வினைகளே (5) என்பது இந்த மாலையில் நறுமணம் மிக்க வாடா நறுமலர். இந்தத் தலத்தைப் பற்றிச்சிந்திக்கும் நமக்கு முதன் முதலாக மொழியியல் பற்றிச்சிந்தித்து முதல்நூல் எழுதி வெளியிட்ட மாகறல் கார்த்திகேய முதலியார் நினைவிற்கு வருகின்றார். - மாகறல் மாதேவனிடம் விடைபெற்றுக் கொண்டு குரங்கணில் முட்டத்துக்கு வருகின்றார். விழுர்ே மழுவாட்' (1.31) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடி தலத்துப் பெருமானை வழிபடுகின்றார் வேணுபுரத்தார். இதில், இறையார் வளையாளை யொர்பாகத் தடக்கிக் கறையார் மிடற்றான் கரிகீறிய கையான் குறையார் மதிசூடி குரங்கணில் முட்டத் துறைவான் எமையாள் உடையொண் சுடரானே. (5) என்பது ஐந்தாவது வாடா நறுமலர். 4. குரங்கணில் முட்டம்: காஞ்சியிலிருந்து 6 கல் தொலைவிலுள்ளது. குரங்கு (வாலி) அணில், முட்டம் (காக்கை பூசித்த தலம். சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/312&oldid=856287" இலிருந்து மீள்விக்கப்பட்டது