பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 ஞானசம்பந்தர் இட்டுச் சென்று வழிபாடு செய்துவைத்தார். ஆண்பனை களைப் பெண்பனைகளாக்கி அற்புதம் நிகழ்த்திய சம்பந்தப் பெருமானையும் நினைவு கூரச்செய்தது இன்றும் என்மனத்தில் பசுமையாகவே உள்ளது. இது நிற்க. ஆண்பனை பெண்பனையாதல் : ச ம் ய ந் த ர் திருவோத்துTர் இறைவனை வழிபட்டு அவ்வூரில் தங்கி யிருந்தபொழுது சிவனடியார் ஒருவர் காழிவேந்தரை வணங்கி நின்று, "எளியேன் இறைவனுக்கு அடிமைத் .ெ தா ன் டன். சிவனடியார்கட்கெனத் தண்ணிர் இறைத்து வளர்த்த பனைகள் ஒன்றேனும் காய்த்திலது. இனையறிந்த சமணர்கள் இப்பனைகளைச் சிவனருளால் காய்க்க வைக்க முடியுமா?’ என வினவி அடியேனை இகழ்கின்றனர்." என முறையிடுகின்றார். இது கேட்ட பிள்ளையார் திருக்கோயிலினுள் சென்று மேற்குறிப்பிட்ட திருப்பதிகத்தைப் பாடி அதன் திருக்கடைக் காப்பில், குரும்பை யாண்பனை யின்குலையோத்தூர் அரும்பு கொன்றை அடிகளைப் பெரும்புகலி யுள்ஞான சம்பந் தன்சொல் விரும்பு வார்வினை வீடே. . ான முடித்த அளவில் அங்கிருந்த ஆண்பனைகளெல்லாம் பெண்பனைகளாக மாறிக் குரும்பை யீன்று காய்க்கின்றன. இத்திருவருள் நிகழ்ச்சியை நேரில் கண்ட சமணர்கள் பலரும் தமது சமயத்தை வெறுத்துச் சிவநெறியைத் தழுவிப் பிள்ளையாரை வணங்கினார்கள் என்பது வரலாறு.” திருவோத்தூரிலிருந்து பிள்ளையார் திருமாகறல்? என்ற தலத்திற்கு வருகின்றார். வீங்குவிளை (3.72) என்ற 2. பெ.பு. ஞானசம்பந். 977-983. 3. மாகறல்: காஞ்சியிலிருந்து 10 கல் தொலைவு. பேருந்து வழி. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்றுள்ள தலம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/311&oldid=856285" இலிருந்து மீள்விக்கப்பட்டது