பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 769 என்பது முதல் பாடல், நான் திருப்பதியில் பணியாற்றிய போது (1975 என்று நினைக்கின்றேன்) செய்யாறு அரசினர் கல்லூரியில் முதல்வராக இருந்த பேராசிரியர் க. பெருமாள் கல்லூரியில் ஒரு சிறப்புச் சொற்பொழிவுக்கு அழைத்திருந் தார். அறிவியல் தமிழ் என்ற தலைப்பில் பேசியதாக நினைவு. பேராசிரியர் பெருமாள் உழவர் குடிவழியைச் சேர்ந்தவர். உடல் உழைப்புக்கு அஞ்சாதவர்; அப்பர் பெருமானின் கைத்தொண்டு இவருக்கு அகத்தெழுச்சியை விளைவித்திருக்க வேண்டும். பாலைவனமாக இருந்த கல்லூரி வளாகத்தைச் சோலைவனமாக்கிப் பொவி வுறச் செய்த திருத்தொண்டை நேரில் கண்ணுற்றேன். இவரே உடலுழைப்பிற்கு அஞ்சாதவராதலால் தலை aueð ord toss Lips" (Follow the Leader) arson -osu மொழிக்கிணங்க மாணாக்கர்களில் பெரும்பாலோர் இவர் வழி நடந்து பெரும் ஒத்துழைப்பு நல்கியதால் இவர் பணி சிறப்புற்றோங்கியது. கல்லூரியில் பிறபாடங்களைத் தமிழில் கற்பிப்பதில் பேரூக்கம் காட்டி வந்தவர். நான் வேதியியல் பட்டதாரி யாதலால என்னை பி. எஸ்சி வகுப்பில் வேதியியல் நடைபெறும் வகுப்பொன்றிற்கு இட்டுச் சென்றார். அறிவியல் பேராசிரியர் தமிழில் அற்புதமாகக் கற்பித்தது என்னை வியக்க வைத்தது. ஒருசில கலைச் சொற்களைத் தவிர ஓர் ஆங்கிலச் சொல்லோ, வடமொழிச் சொல்லோ, கொச்தைத் தமிழோ கலவாமல் இலக்கியம் கற்பிப்பது போல் அழகாகக் கற்பித்ததை நேரில் கண்டு மகிழ்ந்தேன். மாணாக்கர்கள் முகங்களிலெல்லாம் பகலவனைக் கண்ட தாமரை மலர்களையொத்த மலர்ச்சியைக் கண்டு பெருங் களிப்புற்றேன். - நான் செய்யாற்றில் தங்கியிருந்த காலத்தில் ஒருநாள் காலை என்னையும் பேராசிரியர் க. சஞ்சீவியையும் (இவரும் சொற்பொழிவுக்காக வந்திருந்தவர்) திருவோத்துருக்கு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/310&oldid=856283" இலிருந்து மீள்விக்கப்பட்டது