பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் சிான்றோர்களை உடைத்தாகிய தொண்டை நாட்டில் முப்பத்திரண்டு சிவத்தலங்கள் உள்ளன. நடுநாட்டுத் திருத்தல வழிபாட்டை நிறைவு செய்து கொண்ட கழுமல வேந்தர் தொண்டை நாட்டுப் பயணத்தைத் தொடங்கு கின்றார். திருவோத்துனர்' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். பூத்தேர்ந்தாயன் (1.54) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடி திருவோத்துார் இறைவனை வழுத்துகின்றார். இதில், பூத்தேர்ந் தாயன கொண்டுகின் பொன்னடி ஏத்தாதார் இல்லை எண்ணுங்கால் ஒத்துணர் மேய வொளிமழுவா ளங்கைக் கூத்தீ ரும்ம குணங்களே - (1) 1. ஒத்தூர் (திருவேதிபுரம், திருவத்துார்): காஞ்சி யிலிருந்து 19 கல் தொலைவிலுள்ளது. காஞ்சியிலிருந்து பேருந்து வசதி உண்டு. வந்தவாசி செல்லும் பேருந்தில் ஏற வேண்டும். கோயிலின் மேற்கில் சேயாறு (செய்யாறு) ஒடுகின்றது. சிவபெருமான் தேவர்கள் முனிவர்கட்கு வேதப் பொருளை ஒதியதலம் (ஒத்துவேதம்). சம்பந்தர் அடியார் வேண்டுகோட்கிணங்கி ஆண்பனைகளைப் பெண்பனை களாக்கிய அற்புதம் நிகழ்ந்த தலம். தை மாதம் இரத சப்தமியைத் தேர்த்திருநாளாகக் கொண்ட பத்து நாள் திருவிழா நடைபெறுகின்றது. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற திருத்தலம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/309&oldid=856280" இலிருந்து மீள்விக்கப்பட்டது