பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 277 மலையினார் பருப்பதத் (1.75) என்ற திருப்பதிகம் பாடி இத்தலத்து இறைவனை வழிபடுகின்றார். இதில், ருேளான் தீயுளான் அந்தரத் துள்ளான் நினைப்பவர் மனத்துளான் கித்தமா ஏத்தும் ஊருளான் எனதுரை தனதுரை யாக ஒற்றைவெள்னேறுகந் தேறிய ஒருவன் பாருணார் பாடலோ டாட லறாத பண்முரன் றஞ்சிறை வண்டினம் பாடும் ஏருளார் பைம்பொழி லிலம்பையங் கோட்டுள் இருக்கையாப் பேணியென் னெழில் . கொள்வ தியல்பே. (7) என்பது ஏழாம் பாடல். எல்லாப் பாடல்களையும் படித்து கொஞ்சு தமிழில் விஞ்சும் பக்திச் சுவையை அநுபவித்து மகிழவேண்டும். - இலம்பையங்கோட்டுர் இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு, திருவிற்கோலம்' என்ற திருத்தலத்திற்கு வருகின்றார் திருஞானசம்பந்தர். உருவினா ருமையொடும்" (3.23) என்ற பதிகம் பாடி இத்தலத்து இறைவனை ஏத்து கின்றார். இதில், 12. விற்கோலம் (கூவம்): கடம்பத்துார் என்ற இருப் பூர்தி நிலையத்திலிருந்து 5 கல் தொலைவு. சென்னை பிலிருந்து கூவத்திற்குப் பேருந்து வசதி உண்டு. திரிபுரம் எரிக்கச் செல்லும் வழியில் இத்தலத்தில் தேரின் கூவரம் (= ஏர்க்கால்) ஒடிந்தமையால், சிவபெருமான் விற்கோல மாகக் காட்சியளித்தமையால் தலப்பெயர் திருவிற்கோலம் என்றும் கூவம் என்றும் வழங்கி வருகின்றது. மூலத்தான மூர்த்தி தீண்டாத் திருமேனி, துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் இயற்றிய தலபுராணம் அருமையானது. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். இத்தலத்துப் பதிகம் 5, 6ஆம் பாடலில் வரும் கூகம் என்பது மருவி கூவம் ஆயிற்று என்பதும் பொருந்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/318&oldid=856299" இலிருந்து மீள்விக்கப்பட்டது