பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 - . ஞானசம்பந்தர் முந்தினான் மூவருள் முதல்வ னாயினான் கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான் அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே. - (5) என்பது ஐந்தாவது பாடல். இப்பதிகத்தில் எட்டாவது பாடல் காணப்பெறவில்லை. . . . . . . திருவிற்கோலத்திறைவனிடம் வி ைட .ெ ற் று க் கொண்டு திருவூறல் (தக்கோலம்) என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். மாறில வுணரானம் (1.105) என்ற முதற். குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனை ஏத்து கின்றார். இதில், - கெய்யணி மூவிலை வேல்நிறை வெண்மழு, வும்மன லுமன்று கையணி கொள்கையி னான்கட வுள்ளிடம் வினவில் மையணி கண்மட வார்பலர் வந்திறைஞ்ச மன்னி கம்மை உய்யும் வகைபுரிந் தான்திரு - r ஊறலை யுள்குதுமே. - (4) என்பது நான்காம் திருப்பாடல். - - - - 13. திருஊறல் (தக்கோலம்): அரக்கோணம் - செங்கல் பட்டு இருப்பூர்தி வழியில் தக்கோலம் என்ற நிலையத்தி லிருந்து 3 கல் தொலைவு. கோயிலின் மேற்புறம் மலைச் சரிவில் ஒர் இயற்கை ஊற்று உள்ளது. இதிலிருந்து தண்ணிர் கோயிலின் உட்புறச் சுற்றில் தரைமட்டத்தில் ஒரு நந்தி வாயின் வழியாக வந்து, நாற்புறமும் ஓடி, கோயிலுக்கெதிரில் மற்றொரு நந்தி வாயின் வழியாக விழுந்து ஒரு சிறு குளத்தை நிரப்பி வழிந்து ஒடுகின்றது. சோழ மன்னனும் மேலைச் சாளுக்கிய மன்னனும் போர் புரிந்த இடம் இங்கு மணற்பெருவெளியாக உள்ளது. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/319&oldid=856301" இலிருந்து மீள்விக்கப்பட்டது