பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 279 தக்கோலத்திலிருந்து கள்ளில் என்ற திருத்தலத்திற்கு வருகின்றார். முள்ளின் மேல் (1.119) என்ற முதற்குறிப் புடைய திருப்பதிகத்தால் இத்தலத் திசனை ஏத்துகின்றார். இதில், வரியாய மலரானும் வையந் தன்னை உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங் கரியானும் அறியாத கள்ளில் மேயான் பெரியானென் றறிவார்கள் பேசு வாரே. {9} என்பது ஒன்பதாம் பாடல். . கள்ளில் பெருமானிடம் விடை பெற்றுக்கொண்டு திருவாலங்காடு வருகின்றார். துஞ்சவருவார் (1.43) என்ற திருப்பதிகத்தால் வழிபடுகின்றார். இதில், 14. கள்ளில் (திருக்கள்ளம்) : பொன்னேரி இருப் பூர்தி நிலையத்திலிருந்து 11 கல் தொலைவு. சென்னை தங்க சாலைப் பேருந்து நிலையத்திலிருந்து பெரியபாளையம். நாகலாபுரம் செல்லும் பேருந்தில் ஏறி கன்னிப்புத்தார் (கன்னிப் பேர்) என்ற இடத்தில் இறங்கி 2 கல் தொலைவு மேலும் சென்றால் இத்தலத்தை அடையலாம் (21 கல்). சென்னை பர்மாஷெல் தலைமை நிலையத்தருகிலிருக்கும் பேருந்து நிலையத்தில் பூண்டி - திருத்தணி திருவள்ளுர் செல்லும் பேருந்தில் ஏறி அத்திப்பேட்டிலிறங்கி கொடு தலை ஆற்றையும் பூண்டி வாய்க் காலையும் கடந்து சென்றாலும் இத்தலம் சேரலாம் (19 கல்). திருவள்ளுர் நிலையத்திலிருந்து பேருந்து வழிவாக அத்திப்பேட்டி விறங்கிச் சென்றாலும் இத்தலம் சேரலாம் (19 கல்). சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். 15. ஆலங்காடு (திருவாலங்காடு): சென்னை - அரக் கோணம் இருப்பூர்தி நிலையத்திலுள்ள திருவாலங்காடு என்ற நிலையத்திலிருந்து 3 கல் தொலைவிலுள்ளது. 8 மணங்கு செப்பேடு ஒன்றில் இராஜேந்திர சோழன் பழையனூர் கிராமத்தைத் திரு ஆலங்காட்டு இறைவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/320&oldid=856305" இலிருந்து மீள்விக்கப்பட்டது