பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 ஞானசம்பந்தர் கணையும் வரிசிலையும் எரியும்கூடிக் கவர்ந்துண்ண இணையில் எயில்மூன்றும் எரித்திட்டார் எம்மிறைவனார் பிணையும் சிறுமறியும் கலையும் எல்லாம் கங்குல்சேர்ந் தனையும் பழையனூர் - ஆலங்காட் டெம்மடிகளே. (8) என்பது எட்டாம் பாடல். தானமாகத் தந்த செய்தி விவரிக்கப் பெற்றுள்ளது. அக் காலத்தில் இவ்வூர்க் கோயில் நிலங்களிலிருந்து கள் இறக் குதல் இல்லை. காளியைத் தோற்கடிக்கச் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் புரிந்த தலம். காரைக்கா லம்மையார் தலையாலே நடந்து வந்த தலம். அம்மையார் தலையால் நடந்து வந்த இத்தலத்தைத் தமது காலால் மிதிக்க அஞ்சிய சம்பந்தர் ஊருக்கு வெளியில் ஓரிடத்தில் இறங்கி, அன்றிரவு துயிலும்போது ஆலங்காட்டப்பன் *நம்மைப் பாடுதற்கு அயர்ந்தனையே?’ என்று நினைவூட்ட அடுத்த நாள் தலத்துக்குள் சென்று பதிகம் பாடி வணங்கி னார். ஆலங்காட்டு நீலி வஞ்சனையால் உயிர் நீத்த வணிகனுக்கு, உறுதியளித்த 70 வேளாளர்கள் தாங்கள் உயிர்விட்ட செய்தியும் இத்தல வரலாற்றில் ஒரு பகுதி யாகும். இந்த இரண்டு செய்திகளும் 1.45:1 என்ற பாசு ரத்தில் குறிப்பிடப் பெற்றுள்ளன. கூத்த பிரான் சபைகள் ஐந்தனுள் இரத்தினசபை அல்லது மணிமன்று இங்குள்ளது. பழையனுரர் ஆலங்காட்டிற்கு கல் தொலைவிலுள்ளது. தேவார முதலி மூவர்கட்கும். அம்மையார் முற்பட்டவ ராகையால் அவர் திருவாக்கு மூத்த திருப்பதிகம் என்று வழங்கப்படுகின்றது. (இவ்வாக்கு முழுமையும் 11ஆம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது). ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி மார்கழித் திருவாதிரையன்றும் பங்குனி உத்தரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/321&oldid=856307" இலிருந்து மீள்விக்கப்பட்டது