பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 281 ஆலங்காட்டண்ணலிடம் விடைபெற்றுக்கொண்டு திருப் பாசூர் ' என்ற திருத்தலத்துக்கு வருகின்றார். சிக்தை யிடையார் (2.60) என்ற முதற்குறிப்புடைய திருப்பதிகம் பாடித் தலத்து இறைவனை வழிபடுகின்றார். இதில், கையால்தொழுது தலைசாய்த்து உள்ளம் கசிவார்கள் மெய்யார் குறையும்துயரும் தீர்க்கும் விமலனார் கெய்யாடு தலஞ்சுடையார் நிலாவும் ஊர்போலும் பைவாய் காகம் கோடலினும் பாசூரே. (3) என்பது மூன்றாவது பாசுரம், திருப்பாசூர் இறைவனிடம் விடை பெற்றுக்கொண்டு பிள்ளையார் திருக்காரிக்கரை. வருகின்றார்; இறை வணை வழிபடுகின்றார் (பதிகம் இல்லை). இத்தலத் திறைவனிடம் விடை பெற்றுக் கொண்டு திருக்கானத்தி' தன்றும் பழையனூருக்கு எழுந்தருளுவது வழக்கம், முஞ்சி கேசவ முனிவர்க்கும் கார்க்கோடக முனிவர்க்கும் அப் பொழுது .காட்சி தருவார் 16. பா சூர் (திருப்பாசூர்): திருவள்ளுர் என்ற இருப் பூர்தி நிலையத்திலிருந்து 3; கல் தொலைவு. 17. இது தொண்டை நாட்டு வைப்புத் தலம். திருக்காரிக்கரை எனச் சேக்கிழார் (ஞானசம்பந். 1015) குறிப்பிடுவர். இது நாகலாபுரத்திலிருந்து ஒரு கல் தொலைவிலுள்ள ராமகிரி என்ற ஊராகும். காரி {காலேறு) நதியின் கரையிலுள்ளமையால் இப்பெயர் பெற்றது, 18. காளத்தி (பூரீகாளஹஸ்தி) ; ரேணிகுண்டா - கூடுர் இருப்பூர்தி வழியில் உள்ள நிலையம். இங்கிருத்து கோயில் ஒரு கல் தொலைவு. சென்னையிலிருந்து பேருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/322&oldid=856308" இலிருந்து மீள்விக்கப்பட்டது