பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 ஞானசம்பந்தர் வந்து சேர்கின்றார். சிவனடியார்களும் ஊர்ப் பெரு மக்களும் சிறந்த வரவேற்பு நல்குகின்றனர். ‘வானவர்கள் தானவர்கள் (3.69) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ். மாலையால் வழிபடுகின்றார். இதில், வேயனைய தோளுமையொர் பாகமது வாகவிடை யேறிசடைமேல் தூயமதி சூடிசுடு காட்டில்கட மாடிமலை தன்னைவினவில் வாய்கலசமாகவழி பாடுசெயும் வேடன்மல ராகும்.நயனம் காய்கணையி னாலிடங் தீசனடி கூடுகாளத்திமலையே, (4) வசதிகள் உள்ளன. கோயில் அருகில் இறங்கலாம். சிலந்தி ( - பூர்), பாம்பு ( = காளம்), யானை ( = ஹஸ்தி) ஆகிய மூன்றும் பூசித்து முத்தி அடைந்த தலம். மலைமேல் உச்சி யிலிருந்த குடுமித் தேவர் வழிபாடே கண்ணப்ப நாயனார் செய்ததென்பதும், தேவார முதலிகள் மூவரும் வழி பட்டனர் எ ன் பது ம் பெரியபுராணத்தாலறியப்படும். ஆனால் இப்போது பொன்முகலி யாற்றங்கரையில் ஊர்த் தரைமட்டத்திலுள்ள கோயிலுக்குள் இருக்கும் மூர்த்தி யையே வணங்குகின்றோம். ஆற்றிலிருந்து சில படிகளேறி. ஆலயம் செல்வதால் இப்போதுள்ள ஆலயமும் மலை மீதுள்ளதென்பாரும் உளர். பஞ்சபூத தலங்களுள் இது வாயு தலம். மூலத்தானத்திலுள்ள விளக்குகள் எப்போதும் காற்றில் அசைந்து கொண்டே இருக்கும். சிவலிங்க மூர்த்தியின் திருவுருவத்தில் சிலந்தி, பாம்பு, யானை மூன்றும் உள்ளன. சுயம்புலிங்கம். நீண்ட பல செங்குத் தான உட்குழிந்த குடைவுகள் நிரம்பிய திருமேனி. 11 ஆம் திருமுறையிலுள்ள கயிலைப் பாதி காளத்தி பாதி அந்தாதியும், கண்ணப்பர்தேவர் திருமறமும் நக்கீரரால் பாடப் பெற்ற தலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/323&oldid=856310" இலிருந்து மீள்விக்கப்பட்டது