பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 283 என்பது நான்காவது பாசுரம். இதில் கண்ணப்ப நாயனாரது: அன்பின் திறம் போற்றப்பெற்றுள்ளது. பொன்முகலியாற்றின் கரையை அடைந்து காளத்தி மலை மீதேறிச் சிவபெருமானைப் பணிந்து வீழ்ந்கெழு கின்றார்; தாம் வழிபட்ட பயன் காண்பார் போல் வில் வேடர் பெருமானாகிய கண்ணப்ப நாயனாரைக் கண்டு தாழ்கின்றார். உள்ளத்தில் தெளிவற்ற அன்பின் மெய்ம்மை உருவினையும் அத்தகைய அன்பினுள்ளே நிலை பெற்றுத் தோன்றும் சிவப் பரம்பொருளையும் ஒருங்கே கண்ட விருப்பம் பொங்கப் புகலிப் பிள்ளையார் பல முறையும் வீழ்ந்து வணங்குகின்றார். பின்பு காளத்தி மலையினின்றும் இறங்கி அங்குள்ள திருமடமொன்றில் அமர்ந்து பெருமானைக் காலங்கள்தோறும் வழிபட்டிருக் &airpm f. 19 காழிவேந்தர் காளத்தியில் தங்கியிருக்கும் நாட்களில் வடதிசையிலுள்ள திருக்கயிலாயம், கேதாரம், கோகரணம், திருப்பருப்பதம், இந்திர நீல பருப்பதம், அநேகங்காவதம் முதலிய தலங்கள்மீது திருப்பதிகங்கள் பாடி வழிபடு கின்றார். வடகயிலை 30 மீதுள்ள திருப்பதிகம் பொடி கொளுருவர் 1-68) என்ற முதற் குறிப்புடையது. பொடிகொ ளுருவர் புலியின தளர்புரிநூல் திகழ்மார்பில் கடிகொள் கொன்றை கலந்தநீற்றர் கரைசேர் கண்டத்தார் 19. பெ. பு : ஞானசம்பந். 1021.1024. 20. கயிலாயம் : இமயமலையிலுள்ள தி ரு ப் பதி, சென்னை - இலட்சுமணபுரி (லக்னோ) - பிரெய்லி - காத்கோரம் - அ ல் மோ ரா சென்று - பரிச்சினா - கனெரிச்சீனா - கநாய் - பெரிதாகு - தால் - டிடிகட் - ஆஸ்கோடெடை - பலவக் கோட்டை - டார்ச்சுலா -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/324&oldid=856312" இலிருந்து மீள்விக்கப்பட்டது