பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 ஞானசம்பந்தர் மரியான் (3.79) என்ற முதற் குறிப்புடைய செந்தமிழ்ப் பதிகம் பாடிப் போற்றுகின்றார். இதில், இறுதிரு மேனிமிசையாடிநிறை வார்கழல் சிலம்பொ லிசெய ஏறுவிளை யாடவிசை கொண்டிடு பலிக்குவரு மீசன் இடமாம் ஆறு சமயங்களும் விரும்பியடி பேணிவர னாகம மிகக் கூறுமணம் வேறிரதி வந்தடியார் கம்பம்வரு கோக ரணமே, (6) என்பது ஆறாவது பாடல். வசதி உண்டு. வழிநெடுகத் தேக்குமரக் காடுகளும், மலைச் சரிவுகளும், இயற்கை வனப்புமிக்க சோலைகளும் உள்ளன. தலம் மேல் சமுத்திரக் கரையில் உள்ளது. பம்பாய் மாநிலம் வடகன்னட மாவட்டத்திலுள்ளது. கயிலையிலிருந்து இராவணன் ஒர் இலிங்கம் கொணர்ந் தான். மாலைக் கடன் முடித்தற்பொருட்டுத் தரையில் வைக்கக் கூடாதென்று நினைத்தபோது, விநாயகர் ஒரு சிறுவன் போல எதிர்வந்து தமது கையில் சிவலிங்கத்தை யேற்று, மீண்டும் விரைவில் பெற்றுக் கொள்ளாவிடில் தரையில் வைத்து விடுவதாகச் சொன்னார். சிறிது நேரமானவுடன் வைத்துவிட்டார். மாலைக்கடன் முடிந்த வுடன் இராவணன் எடுக்க முயன்றான். இலிங்கம் வேரூன்றியபடியால் எவ்வளவு முயன்றும் பெயர்க்க முடியவில்லை. பல .ெ ம ல் லா ம் பயன்படாதபடியால் இலிங்கம் மகா பல விங்கமாய்க் கீழேயே போய், மேலும் ஒரு பசுவின் காது நுனியளவே தெரிந்தபடியால் தலப்பெயர் கோகரணம் ஆயிற்று. இத்தலத்தில் மகாபல லிங்கத்தைத் தொட்டு, நீராட்டி வழிபடலாம். விநாயகர் திருவுருவம் நின்ற திருக்கோலமாக அழகு நிரம்பியுள்ளது. மகா சிவராத்திரியில் திருத்தேர். ஓர் இலட்சம் பக்தர்கட்கு மேல் சேவிப்பார்கள். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/327&oldid=856318" இலிருந்து மீள்விக்கப்பட்டது