பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 ஞானசம்பந்தர் என்பது ஐந்தாவது பாடல். அடுத்து, குலவு பாரிடம் (2:27). என்ற முதற் குறிப்புடைய பதிகத்தால் இந்திர லே. பருப்பதம் ' என்ற தலத்தைப் போற்றுகின்றார். இதில், காச மாம்வினை நன்மை தான்வரும் தேச மார்புக ழாய செம்மையெம் ஈச னிந்திர லேப் பருப்பதம் கூசி வாழ்த்துதுங் குணம தாகவே. (4) 24. இந்திர லே பருப்பதம்: இமய மலையிலுள்ள தலம். சென்னை-கல்கத்தா - பகால்பூர் - தர்பங்கா - ரக்குல் - பிக்நதொரி - செல்லும் பாதையில் ரக்குலிலாவது பிக்நதொரியிலாவது இறங்கி அங்கிருந்து சுமார் 60. கல் தொலைவிலுள்ள நேபாள நாட்டிலுள்ள காட்மாண்டு என்னும் தலைநகர் செல்லவேண்டும். இங்குப் பசுபதி நேபாளம் என்று பெரியபுராணத்தில் திருமூல வரலாற்றி லுள்ள (திருமூலர் புராணம் - 3) பசுபதி கோயிலைச். சேவித்து அங்கிருந்து வடகிழக்கில் 100 கல் தொலைவு சென்றால் இந்திர நீல பருப்பதம் சென்று அடையலாம். கடல் மட்டத்திற்கு மேல். 18000 அடி உயரமுள்ளது. கேதாரம். கைலாயம் போலவே பனிக்கட்டியின் மீது நடந்து செல்லவேண்டிய பகுதியும் உண்டு. ஒரு மலை நாகப்படம்போற் கவிந்து ஈசான திக்கை நோக்கியுள்ளது. கட்டப்பட்ட கோயிலில்லை. மூர்த்தி தலசுயம்பு ஆகிய மலையின் பகுதியே; குவிவான கீழ்ப்பகுதி பீடம், இந்தக் கீழ்ப் பகுதி நீலமயமான கற்பாறை. இங்கு வடமேற்கில் ஒரு பள்ளத்தாக்கில் ஒடுவது நீல கங்கா என்ற ஒரு சிறிய ஆறு, ஈசன் சந்நிதிக்குச் சற்று வடகிழக்கில் பச்சை நிறமுள்ள கற்பாறையே சுயம்பு அம்பிகை. சுவாமியின் அருகில் அரைச் சந்திர வடிவில் ஒரு பாறையே இந்திரன். இப்பாறையில் கண்கள் போன்ற பல குழிவுகள்; பக்கத்தில் கிரீடம், வஜ்ராயுதம் போன்ற வடிவங்கள் உள்ளன. இந்திரன் பூசித்த தலம். சம்பந்தர் காளத்தியிலிருந்தே பதிகம் அருளினார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/329&oldid=856323" இலிருந்து மீள்விக்கப்பட்டது