பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 289 என்பது நான்காவது பாடல். அடுத்து, அனேகதங்காவதம்' என்ற தலத்தின் மீது டேல் மேவுகிமிர் (2.5) என்ற முதற் குறிப்புடைய திருப்பதிகம் பாடிப் பரவுகின்றார். இதில், வெருவிவேழம் இரியக்கதிர் முத்தொடு வெண்பளிங் குருவிவீழ வயிரங்கொழி பாவகி லுக்திவெள் அருவிபாயு மணிசாரல் அனேகதங் காவதம் மருவிவாழும் பெருமான் கழல்சேர்வது வாய்மையே. (7) என்பது ஏழாம் பாடல். இங்க ணம் வடநாட்டுத் திருத்தலங்கள் மீது செந்தமிழ்ப் பாமாலைகள் பாடிய காழிப் பிள்ளையார் காளத்தியான் மீது 'சந்தமாரகிலொடும் (3.35) என்ற செந்தமிழ்ப் பாமாலை சூட்டி அப்பெருமானிடம் விடைபெறுகின்றார். 25. அனேகதங்காவதம் (கெளரி குண்டம்): சென்னை - ரிஷிகேசம் - தேவப்ரயாகை - கீர்த்திநகர் - பூர் நகர் - ருத்திரப்பிரயாகை - சத்தோலி - நாம்பூர் - அகத்திய முனி - சவுர்ஹி - சந்திரபுரி - குண்ட்சட்டி - குப்தகாசி - நளசட்டி - நாராயண்கோடி - மேகண்டா - பாடா சட்டி - பதல்பூர் - ராம்பூர் - கெளரிகுண்டம் அடைதல் வேண்டும். இதுதான் அனேகதங்காவதம் என்னும் தலம். இது கடல் மட்டத்திற்கு மேல் 12000 அடி உயரம். வழிக் குறிப்பில் சட்டி என்றால் தங்குமிடம் என்றும், பிரயாகை என்றால் இரண்டு ஆறுகள் கூடுமிடம் என்பதும் பொருள். தேவப்ரயாகை என்பது பெரியாழ்வார் மங்களாசாசனம் பெற்ற கண்டம் கடிநகர் என்னும் திருமால் தலம். உமா தேவியார் தவம் இருந்த இடமாதலால் கெளரி குண்டம் என்று அனேகதங்காவதற்குப் பெயராயிற்று. சம்பந்தர் காளத்தியிலிருந்தே பதிகம் ஒதியருளினார். 19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/330&oldid=856327" இலிருந்து மீள்விக்கப்பட்டது