பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 ஞானசம்பந்தர் முத்து மாமணிகளும் முழுமலர்த் திரள்களும் எத்து மாமுகலியின் கரையினில் எழில்பெறக் கத்திட அரக்கனைக் கால்விர லூன்றிய அத்தன்றன் காளத்தி r அணைவது கருமமே. - (8} என்பது எட்டாவது திருப்பாடல். இப்பதிகத்தில் 6, 7ஆம் பாடல்கள் காணப்பெறவில்லை. - காளத்தியானிடம் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டுப் பாலாற்றின் GHi-5 @ fr.6%) til அடைந்து திருவேற்காடு என்னும் திருத்தலத்தை அடைகின்றார். "ஒள்ளி துள்ளக் (1.57) என்ற குறிப்புடைய திருப்பதிகம் பாடி இறைவனைப் போற்றுகின்றார். காட்டி னாலும் அயர்த்திடக் காலனை விட்டி னானுறை வேற்காடு பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர் ஒட்டி னார்வினை ஒல்லையே. (5) என்பது ஐந்தாவது திருப்பாடல். மூன்றாண்டுகட்கு முன்பு (1982) இத்தலத்தை அடியேன் வழிபட்டதுண்டு. . 26. வேற்காடு (திருவேற்காடு): சென்னை-அரக் கோணம் இருப்பூர்தி வழியில் ஆவடி நிலையத்திலிருந்து 4 கல் தொலைவு. சென்னையிலிருந்து பேருந்து மூலம் செல்வது வசதி. மூர்க்க நாயனார் தலம். அகத்தியருக்குத் திருமணம் காட்டிய காட்சி மூலத்தான இலிங்கத்தின் பின்புறம் உள்ளது. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். சில ஆண்டுகளாக இத்தலம் மிகு புகழோங்கி யுள்ளது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/331&oldid=856329" இலிருந்து மீள்விக்கப்பட்டது