பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 29 | வேற்காட்டு இறைவனிடம் விடைபெற்றுக் கொண்டு வலிதாயம்: என்ற திருத்தலம் வந்தனைகின்றார் பிள்ளையார். 'பத்தரோடு பலரும்' (1.3} என்ற முதற் குறிப்புடைய பதிகத்தால் பரமனைப் பரவுகின்றார். இதில், புந்தி யொன்றி கினை வார்வினை யாயின தீரப் பொருளாய அக்தி யன்னதொரு பேரொளி யானமர் கோயி லயலெங்கும் மந்தி வந்துகடு வன்னொடுங் கூடி வணங்கும் வலிதாயம் சிந்தி யாதவர் தம்மடும் வெந்துயர் தீர்தல் எளிதன்றே. (5 என்பது ஐந்தாவது பாடல். ) வலிதாயப் பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு திருவொற்றியூர் வருகின்றார் திருஞானக் கன்று. பெரிய தொண்டர் குழாம் இவரை எதிரேற்று வரவேற்கின்றது. 27. வலிதாயம் (பாடி): சென்னை.அரக்கோணம் இருப்பூர்தி வழியில் வில்லிவாக்கம் என்ற நிலையத்திலிருந்து 2 கல் தொலைவிலுள்ளது. சம்பந்தர் பாடல் மட்டிலும் பெற்ற தலம். - 28. ஒற்றியூர் (திருவொத்தியூர்): சென்னை-தங்கசாலை பேருந்து நிலையத்திலிருந்து அடிக்கடிப் பேருந்து செல் கின்றது. இவ்வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். புற்றிடங்கொண்டார், வன்மீகநாதர், படம் பக்கநாதர் என்பன மூலத்தான மூர்த்தியின் பெயர்கள். கார்த்திகை பெளர்ணமி அடுத்த இரண்டு நாட்கள் புற்றின் மேலுள்ள கவசம் எடுத்துவிடப்படும். புற்றாகவே உள்ள மூர்த்தியைச் சேவிக்கலாம். கவசம் சாத்தியுள்ள பொழுது புற்றின் ஒரு சிறு பகுதியே தென்படும். வடிவுடையம்மன் சந்நிதியில் மலையாளத்து அந்தணர் பூசை. சப்தவிடங்கக் கணக்கில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/332&oldid=856331" இலிருந்து மீள்விக்கப்பட்டது