பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 ஞானசம்பந்தர் யாவரும் திருக்கோயிலுக்கு வர, பிள்ளையார் விடையவன். (3.57) என்ற முதற்குறிப்புடைய செந்தமிழ் மாலை புனைந் தேத்துகின்றார். இதில், விளிதரு ருே மண்ணும் விசும்போ டனல்காலு மாகி அளிதரு பேரரு ளான அரனாகிய ஆதி மூர்த்தி களிதரு வண்டு பண்செய் கமழ்கொன்றை யினோட னிந்த ஒளிதரு வெண்பிறை யானுறை யும்மிடம் ஒற்றி யூரே. (3). என்பது மூன்றாவது பாடல். பிள்ளையார் ஒற்றியூர் இறைவனை வழிபட்ட செய்தி யைச் சேக்கிழார் பெருமான், மிக்கதிருத் தொண்டர்தொழு தணையத் தாமும் தொழுதிழிந்து விடையவன்' என்றெடுத்துப் பாடி மைக்குலவு கண்டத்தர் மகிழும் கோயில் மன்னுதிருக் கோபுரத்து வந்து தாழ்ந்து சேராத தியாகராஜத்தலம், பட்டினத்தடிகள் போற்றியத் தலம்; அவருடைய முத்திதலமும் இதுவே. அடிகளாரின் கோயில் தேர் நிலையிலிருந்து கல் தொலைவிலுள்ளது. கலியநாயனார் தொண்டு புரிந்து முத்தியடைந்ததலம். சங்கிலிநாச்சியார் நம்பியாரூரரைத் திருமணம் புரிந்து வாழ்ந்த தலம். விவரம் தம்பிரான் தோழர்' என்ற என் நூலில் காண்க. ஒற்றியூர்க் கோயிலின் வடமேற்குப் பகுதியில் ஆதிபுரீசர் கோயில் திருப்பணி மிக அழகிய முறையில் செய்யப் பெற்றுள்ளது. மூவர் தேவாரமும், பெற்ற தலம். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/333&oldid=856332" இலிருந்து மீள்விக்கப்பட்டது