பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 293 தக்கதிருக் கடைகாப்புச் சாற்றித் தேவர் தம்பெருமான் திருவாயி லூடுசென்று அக்கருளி வலங்கொண்டு புனிதர் முன்பு போற்றெடுத்துப் படியின்மேல் பொருந்த வீழ்ந்தார். பொற்றிரல்கள் போற்புரிந்த சடையார் தம்பால் பொங்கிஎழுங் காதல்மிகப் பொழிந்து விம்மிப் பற்றி எழும் மயிர்ப்புளகம் எங்கு மாகிப் பரந்திழியம் கண்ணருவி பாய கின்று சொற்றிகழும் திருப்பதிகம் பாடி ஏத்தித் தொழுதுபுறத் தணைந்தருளித் தொண்ட ரோடும் ஒற்றிங்கர் காதலித்தங் கினிது றைந்தார் உலகுய்ய உலவாத ஞானம் உண்டார்." என்று அற்புதமாகக் காட்டுவர். இதைப் படிக்கும் தாமும் சம்பந்தரோடு சேர்ந்து கொண்டு ஒற்றியூர் இறைவனை வழிபடும் நிலையினை அடைந்து விழிகளில் கண்ணிர் பெருக்குகின்றோம். எலும்பைப் பெண்ணாக்குதல்: ஒற்றியூரில் சில நாட்கள் தங்கி இறைவழிபாட்டைக் காலந்தோறும் செய்து வந்த பிள்ளையார் புற்றிடங்கொண்ட பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு மயிலை வர எண்ணியிருக்கின்றார். மயிலையில் வணிகர் மரபில் தோன்றி வாணிகத் தொழிலில் 29. பெ. பு: ஞானசம்பந். 1031, 1032. 30. மயிலை (மயிலாப்பூர்): சென்னை சென்ட்ரல் நிலையத்தினின்றும், எழும்பூர் நிலையத்திலிருந்தும் 4 கல் தொலைவு. உமாதேவியார் மயிலுருவில் சிவபெருமானைப் பூசித்துத் தமது சுய உருவம் பெற்று இறைவனைத் திருமணம் புரிந்து கொண்ட தலம். கோயில் பெயர் கபாலீச்சரம். பழைய காலத்தில் இப்போது?சாந்தோம் கிறித்தவர் கோயிலுள்ள இடத்திலிருந்தது. கி. பி. 16ஆம் நூற்றாண்டில் போர்த்துகேசியர்கள் கைப்பற்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/334&oldid=856334" இலிருந்து மீள்விக்கப்பட்டது