பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 - ஞானசம்பந்தர் மேம்பட்டு பெருஞ்செல்வம் எய்தினார் ஒருவர். இவர் சிவபக்தியால் சிறந்து விளங்கி சிவநேசர் என்னும் பெயர் பெற்று விளங்குகின்றார். இவருக்குப் புறச்சமயங்களைத் தமிழ்நாட்டைவிட்டு அகற்ற வேண்டும் என்ற எண்ணம் உளது. இவர் காழிப்பிள்ளையாரின் பெருமையைக் கேள்வியுற்றிருக்கின்றார். இவருக்குப் பிறந்த பூம்பாவை என்ற அழகுடைய நங்கை மணப்பருவம் எய்தியிருக் கின்றாள். இவளையும் தான் ஈட்டிய பெருநிதியையும் தன்னையும் சிவனேசர் காழிந்ாடுடையவர்க்குக் கொடுக்க எண்ணியிருக்கின்றார். ஒருநாள் பூம்பாவை கன்னிமாடத்தருகேயுள்ள பூஞ் சோலையில் மலர் கொய்யச் செல்லும்பொழுது மல்லிகைப் பந்தரிலே மறைந்து இருந்த பூநாகம் ஒன்று அவளைத் தீண்டு. கின்றது. தந்தையார் மருத்துவர், மந்திரவாதிகளை வர வழைத்து மந்திர தந்திரங்களால் சிகிச்சையளித்தும் பயன் படாது விடம் தலைக்கேறி ஆவிசோர்ந்து மரிக்கின்றாள். சிவநேசர் கலக்கமுற்றாராயினும், இவள் சம்பந்தருக்கு கோயிலைத் தகர்த்து அங்கு ஒரு கோட்டை கட்டினர். அக்கோட்டையிலிருந்த கொடிமரச் சிதைவு இன்றும் காணப்படுகின்றது. பழைய கோயில் கடற்கரையில் திருச்சீரலைவாய்போல் மதிற்கவர்களில் அலை வீச இருந்தது. ஊர்திரை வேலை உலாவும் மயிலை" (சம்பந். 2:27:4) என்ற பாசுரம் இதைத் தெரிவிக்கின்றது. பிள்ளையார் எலும்பைப் பெண்ணாக்கிய நிகழ்ச்சி இக் கோயிலில் நடைபெற்றது. பங்குனிப் பெருவிழாவில் இத்தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் யாவும் காட்டப் பெறுகின்றன. கோயிலில் உள்ள விளக்கு ஒன்றைத் தனது மூக்கினால் தூண்டிய எலி அப்புண்ணியத்தின் பயனாக மறுபிறவியில் மாவலிச் சக்கரவர்த்தியான வரலாற்றை பாசுரம் (நாவுக், 4.49:8) கூறும். மேலைக் கோபுரவாயில் எதிரிலுள்ள விநாயகர் சந்நிதி பெரும்புகழ் வாய்ந்தது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/335&oldid=856338" இலிருந்து மீள்விக்கப்பட்டது