பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம் 29s உரியள் என்று கூறினமையால் இனித் துன்பமுறவேண்டிங் தில்லை எனத் தெளிந்து ஒருவாறு துன்பம் நீங்குகின்றார். 'சம்பந்தர் இவண் போதரும் வரையிலும் தகனஞ்செய்த சாம்பலையும் எலும்பினையும் ஒரு கலயத்திலே இட்டு வைப்பேன்’ எனத் துணிகின்றார். அக்கலயத்தைப் பூசித்தும் வருகின்றார். இந்நிலையில் சம்பந்தர் திருவொற்றியூரில் அடியார்களுடன் எழுந்தருளியுள்ளார். என்ற செய்தி கேட்டு மகிழ்வுற்று அவரை எதிர் கொண்டழைக்கச் செல்லுகின்றார். சம்பந்தரும் மயிலை நாதனை வணங்கும் விருப்புடையராய்த் திருவொற்றி யூரிலிருந்து புறப்பட்டு எதிரே வந்தருளுகின்றார். சிவநேசரும் சம்பந்தரின் முத்துப் பல்லக்கின் கீழ் வீழ்ந்து வணங்குகின்றார். ஞானசம்பந்தரும் சிவிகையினின்றும் இறங்கித் தம்மை வணங்கி நிற்கும் சிவநேசருடைய செயல்களை அடியார்கள் நவிலக் கேட்டு அவருடன் மயிலை வந்து சேர்கின்றார். பிள்ளையார் கபாலீச்சரத்திறைவனை வணங்கிப் புறம்போந்து சிவநேசரை நோக்கி, அன்பீர், தும் திருமகளாரின் என்பு நிறைந்த குடத்தினை உலகறியக் கோயிலின் புறவாயிலில் கொணர் வீராக’ எனப் பணிக் கின்றார். சிவநேசரும் என்பு அடங்கிய குடத்தினைக் கொணர்ந்து கபாலிச்சரத்து இறைவன் திருமுன்னர் வைத்து வணங்குகின்றார். உலகவருக்கு உறுதிப் பொருளை உணர்த்தத் திருவுளங் கொண்ட பிள்ளையார் மயிலை நகர மக்களும் புறச் சமயத்தாரும் காணும் வண்ணம் திருக்கோயிலை வந்தடைகின்றார். வந்தவர் குடத்தினை நோக்கி, இறைவனது திருவருளைச் சிந்தித்து, மக்கள் அடைதற்குரிய பயன் சிவனடியார்கட்கு அமுது செய் வித்தலும் இறைவனுடைய திருவுலாப் பொலிவு கண்டு மகிழ்தலுமே என்பது உண்மையானால், பூம்பாவாய் நீ உலகினர் முன் உயிர் பெற்று வருக எனப் பூம்பாவையை அழைக்கும் முகமாக மட்டிட்ட புன்னையங் கானல் (247)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/336&oldid=856340" இலிருந்து மீள்விக்கப்பட்டது