பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் பரசமயக் கோளரியைப் பாலறா வாயினைப்பூம் பழனம் சூழ்ந்த, சிரபுரத்துத் திருஞான சம்பந்தப் பெருமானைத் தேய மெல்லாம், குரவையிடத் தமிழ்வேதம் விரித்தருளும் கவுணியர்தம்,குலதீ பத்தை, விரவியெமை யாளுடைய வென்றிமழ விளங்களிற்றை விரும்பி வாழ்வாம்.? - சிவ ஞான முனிவர் திருவருட் செல்வர்கள் - என்ற வரிசையில் முதலா வதாக வர வேண்டிய நூல் மூன்றாவதாக வெளிவருகின்றது. சிதம்பிரான் தோழர்' என்ற நூலை எழுதி முடித்த உற்சாகத்தில் ஞானசம்பந்தப் பெருமானின் அருளிச் செயல் களில் ஆழங்கால் பட்டு அநுபவித்தேன். இவர்தம் தமிழ்ப் ப்ாடல்கள் கட்டளை வகைகளாக அமைந்துள்ளன; இவை இசை துணுக்கம் கொண்டவை. இவற்றில் நட்டபாடை (8 கட்டளைகள்}, தக்க நாகம் (7 கட்டளைகள்), தக்கேசி (2 கட்டளைகள்), குறிஞ்சி (5 கட்டளைகள்), வியாழக் குறிஞ்சி (5 கட்டளைகள்) மேகராகக் குறிஞ்சி (4 யாப்பு விகற்பங்கள்) என்பவை முதல் திருமுறையிலும்; இந்தளம் (8 யாப்பு விகற்பங்கள்), சீகாமரம் (2 கட்டளைகள்), காந்தாரம் (9 யாப்பு விகற்பங்கள்), பியந்தைக் காந்தாரம் (3 கட்டளைகள்), நட்டராகம் (4 யாப்பு விகற்பங்கள்), செவ்வழி (ஒரே கட்டளை) என்ற ஆறு பண்கள் இரண்டாம் திருமுறையிலும்; காந்தார பஞ்சமம் (5 யாப்பு விகற்பங் 3. காஞ்சிப் புராணம்-பாயிரம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/34&oldid=856349" இலிருந்து மீள்விக்கப்பட்டது