பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XX烹 இப்பாடலின்கீழ் பலமுறை படித்து - இல்லை பாடி - அநுபவித்து இதிலுள்ள இயற்கைக் காட்சிகளை மனத் திரையில் அமைத்து ஆனந்தம் அடையவேண்டும்" என்று குறித்துள்ளார். தேவாரப் பாடல்கள் கற்பனை வளமும் பொருட் செறிவும் பத்திமையும் நிறைந்தவை. அவற்றைத் துய்த்து இன்புறுதல் கற்பவர் கடனாகும். நிறை மொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறை மொழிகளாய் தேவாரப் பாக்களைச் சுவையுடன் எடுத்துரைத்து நாயன்மார்கள் வழிபாடு செய்த தலங் களுக்கு விளக்கங் கூறி அவர்தம் வரலாறுகளை எளிய இனிய நடையில் நூலாக்கித் தரும் பேராசிரியர் கப்பு ரெட்டியாரின் தொண்டு பாராட்டுதற்குரியது. அவர்தம் பத்திப் பனுவல்களை மெய்யன்பர்கள் சுவைத்துப் பயன் கொள்வார்கள். நாவுக்கரசர், ஞானசம்பந்தர் என்னும் நூல்களைப்போல் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் போன்ற நூல்களைப் படைத்து மேலும் தமிழ்ப்பணி செய்து உடல்நலத்துடன் எல்லா நலங்களும் பெற்று வாழிய பல்லாண்டு என அப் பெரியவரை வாழ்த்து கிறேன். "குறள் இல்லம்" 330, மாரியப்பா நகர், அண்ணாமலைநகர் அஞ்சல் இரா. சாரங்கபாணி பின்கோடு.608 002 15.1%. 1986

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/33&oldid=856325" இலிருந்து மீள்விக்கப்பட்டது