பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

хxix பெற்ற தலம். மெய்கண்டார் சிவஞானபோதம் அருளிச் செய்து திருக்கயிலாய பரம்பரையைத் தாபித்த சந்தான முதற்குரவர் இங்கனம் பதிகளைப் பற்றிய பல்வேறு. செய்திகளைப் பேராசிரியர் அரிதின் முயன்று தொகுத்துத் தந்திருப்பது அன்பர்கள் அவற்றை எளிதில் உணர வழி வகுத்துள்ளது. ஞானசம்பந்தர் அருளிச் செயல்களின் யாப்புப் பற்றிப் பேராசிரியர் விரிவாக ஆராய்ந்துள்ளார். யாப்பின் வகைகளை மொழி மாற்று, மாலை மாற்று, வழிமொழி, மடக்கு: இயமகம், ஏகபாதம், இருக்குக்குறள், எழுகூற்றி ருக்கை ஈரடி, ஈரடி வைப்பு, நாலடிமேல் ஈரடி வைப்பு, முடுகியலாகிய திருவிராகம், சக்கரமாற்று, கோமூத்திரி, கூடற் சதுக்கம் முதலியனவாகும்’ எனக் குறிப்பிட்டு விட்டு அவற்றை 56-72 பக்கங்களில் விளக்கியுள்ளார். யாழ். முரி யி ன் இலக்கணத்தைத் தெளிவுபடுத்தியுள்ளார் (பக். 144). இவை பேராசிரியரின் யாப்பு, இசை ஆகியவை குறித்த புலமையைத் தெள்ளிதிற் காட்டவல்லன. - ஞானசம்பந்தர் பாசுரங்களில் கற்பனை வளத்தையும். காணலாம். அப்பாடல்கள் எல்லாம் தொகுத்துத் தரப்பட வில்லையெனினும் பேராசிரியர் காட்டிய பாடல்களில் அவை இடம் பெற்றுள்ளன. சான்றாகத் திருவையாற்றுப் பதிகப் பாடலைக் காணலாம். புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிக் திட்டைமே லுந்தி அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான் அமருங் கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென் றஞ்சிச் சிலமந்தி அலமந்து மரமேறி முகில்பார்க்கும் திருவை யாறே. (1.130:1).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/32&oldid=856303" இலிருந்து மீள்விக்கப்பட்டது