பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxviii (பக். 119), மருகல் (திருமருகல்) மருகல் என்பது வாழை, வாழை தல விருட்சமாதலால் அப்பெயர் பெற்றது (பக். 150), ஏடகம் (திருவேடகம்) ஏடு தங்கிய இடம் ஏடகம் ஆயிற்றுப் போலும் (பக். 221) இவ்வாறு பெயர் விளக்கங்களைப் பலவிடத்தும் காணலாம். இப்பொழுது பெயர் மாறியிருக்கும் தலப் பெயர்களை நாம் அறிந்து கொள்வதற்குத் துணையாகப் ப ைழ ய பெயருக்குப் பக்கத்தில் அடைப்புக் குறிக்குள் மாறிய பெயரையும் பேராசிரியர் குறித்துச் செல்கின்றார். மயேந்திரப்பள்ளி (கோயிலடிப் பாளையம்) கவிக்காமூர் (அன்னப்பன் பேட்டை) குருகாவூர் (திருக்கடவூர்) எருக்கத்தம் புலியூர் (இராசேந்திரப்பட்டினம்) முதுகுன்றம் (விருத்தாசலம்) நணா பவானி), கோளிலி (திருக்குவளை) கானப்பேர் (காளையார் கோயில்) தினைநகர் (தீர்த்தகிரி, சோபுரம் (தியாகவல்லி) மயிலை (மயிலாப்பூர்) என்பன சில காட்டுகள். முன்னிருந்த பதி மாற்றியமைக்கப்பட் டிருந்தால் அதனையும் சுட்டிச் செல்வர், கழிப்பாலை என்னும் பழைய தலம் கொள்ளிடநதி வெள்ளத்தில் போயிற்று. இப்பொழுதுள்ள கோயில் நெல்வாயில் அரத்துறையாகிய சிவபுரியில் ஒரு தனிக் கோயிலாக உள்ளது (பக். 33). ஊர்பற்றிய பல செய்திகளையும் தொகுத்துக் கூறியிருப்பது நூலைப் படிப்போர்க்குத் தலப் .பயணம் செய்யும்போது பெரிதும் உதவியாயிருக்கும். * பெண்ணாகடம்: விழுப்புரம் - திருச்சி இருப்பூர்தி வழியிலுள்ள பெண்ணாகடம் என்ற நிலையத்திலிருந்து ஒரு கல் தொலைவு. தலப் பெயர் சுருக்கமாகக் கடந்தை என்றும், ஆலயப் பெயர் துரங்கானை மாடம் என்றும் வழங்கும். கலிக்கம்ப நாயனார் தலம். அப்பர் பெருமான் தம்மைச் சிவன் சொத்து என்று உலகறியச் சூலக் குறியும் இடபக் குறியும் தமது தூல உடலில் பொறிக்கும்படி வேண்டி அவ்வாறே பெற்ற அற்புதத் தலம். அச்சுத களப்பாளர் என்ற வேளாளர் திருவெண்காட்டு முக்குள நீராடி வழிபட்டு மெய்கண்டார் என்ற புதல்வரைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/31&oldid=856281" இலிருந்து மீள்விக்கப்பட்டது