பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvii கோளும் நன்னிலையில் இல்லை என்பதை அறிய நேரும்: போது இப்பதிகத்தைக் காலையிலும் மாலையிலும் ஒதி உளங்கரைதல் நன்று என்பது என் அநுபவம் என்று குறிப்பிடுகின்றார். பிறிதோரிடத்தில் பிள்ளையார்க்குப் பிற காப்புகள் மிகை எனக் கருதித் திருநீற்றுக் காப்பினையே அவர்தம் திருநெற்றியில் அணிகின்றனர் என உரைத்த பின் பிற்காலத்தில் பாண்டியம்பதியில் மந்திரமாவது நீறு" என்று தொடங்கித் திருநீற்றுப் பதிகம் பாடித் திருநீற்றின் பெருமையைக் கட்புலனாகக் காட்டப் போகின்றார் அல்லவா?’ என்று இச்செய்தியை இயைபு படுத்திக் காட்டுவர். மேலும் சொந்த வாழ்க்கையில் தமக்கு நேர்ந்த நிகழ்ச்சியை - "மஞ்சட் காமாலையால் தாக்கப் பெற்று நாடியிறங்கி இறைவன் திருவடி நீழலை அடையும் நிலையில் இருந்த அடியேன் திருநீற்றுப் பதிகம் ஒதித் திருநீற்றினை நெற்றியிலும் உடலிலும் அணிந்து பிழைத்து இன்றும் தமிழ்த் தொண்டும் சிவத் தொண்டும் செய்து வருவதை நினைவு கூர்கிறேன் - என்று கூறித் திருநீற்றின் பெருமையைப் புலப்படுத்துவர். இச் சொந்த அநுபவங்கள் அன்பர்களுக்குச் சிவநம்பிக்கை ஊட்டத் துணை புரியும். ஞானசம்பந்தர் வழிபட்ட பதிகளைக் கூறுமிடத்து அவற்றின் பெயர்க் காரணங்களையும் பேராசிரியர் விளக்கிச் செல்வர். தலைச் சங்கையைச் சம்பந்தர் பாடி, இறைஞ்சினார் என்று கூறுமிடத்து அப்பதியின் பெயர்க் காரணம் விளக்கப்பட்டுள்ளது. சிறந்த சங்குகள் விற்பனை செய்யப்பெற்றதால் தலைச்சங்கம் என்று வழங்கினர். இவ்விடத்தைச் சுற்றிப் புரச (பலாச) மரக் காடாக இருந்தமையால் இவ்விடத்தைக் காடு என்றும் வழங்கினர். நாளடைவில் இவ்விரண்டு பெயர்களும் சேர்ந்து தலைச் சங்கக்காடு என்ற திருப்பெயராக வழங்கலாயிற்று. மக்கள் வாக்கில் இத்திருப்பெயர் மருவித் தலைச்சங்காடு என்ற பெருவழக்குப் பெறலாயிற்று (பக். 19). சத்தி முற்றம் (சத்தி முத்தம்) சத்தி சிவத்தை முத்தமிட்ட தலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/30&oldid=856260" இலிருந்து மீள்விக்கப்பட்டது