பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi என்பதைப் பிள்ளையார் அடியார்கள்மூலம் கேள்விப் படுகின்றார். இதனை உணர்த்த அமைச்சர் முதலியோர் வருகையைச் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித். தொண்டர்கள் மூலம் அறிவதை எடுத்துக்காட்டுகின்றார் (பக், 59). பாண்டிய அரசன் சமண சமயத்தைச் சார்ந்த தால் அந்நாட்டுக் குடிமக்களும் அச்சமயத்தை மேற்கொள் கின்றனர். அரசன் எவ்வழியோ குடிமக்களும் அவ்வழி தானே நடப்பார்கள். இன்றைய கட்சி அரசியலிலும் இதைத்தானே நாம் காண்கின்றோம்? சனநாயக ஆட்சியில் பொதுமக்களில் சிலர் ஆட்சியாளர்களின் பாட்டுக்குத் தாளம் போட்டு அல்லது அதற்குத்தகச் சீறியாழை வாசித்துப் பல சலுகைகளையும் பதவிகளையும் பெறுவது நமக்குத் தெரியும் அன்றாட நிகழ்ச்சிகள் அன்றோ?' என விளக்குவர். கவுணியப்பப் பிள்ளையார் தேவர்க்கும் முனிவர்க்கும் கிடைத்தற்கரிய சிவஞானம் பெற்றமையால் திருஞான சம்பந்தர் எனப் போற்றப்பெறுகின்றார் என்று குறிப்பிட்ட பின்னர், அடிக்குறிப்பில் கசிவஞானம் - பதிஞானம். பதிஞானத்திற்குத் தான் பதிப் பொருள் இனிது விளங்கும். பதிஞானத்தால் இறைவனை அறிதலையே சைவ சமய ஆச்சாரியர்கள் அருட்கண்ணால் காணுதல் என்று கூறுவர். இந்த ஞானம் பசுஞானம், பாசஞானம் இரண்டிலும் வேறுபட்டது; உயர்ந்தது' grokr&# சிவஞானத்திற்கு, விளக்கந் தருவது பேராசிரியரின் சமயப் புலமையைக் காட்ட வல்லதாம். (பக். 5). கோளும் நாளும் தீயவேனும் இறைவனடியார்களுக்கு அவை நல்லவே என்று வேயுறு தோளிபங்கன்’ எனத் தொடங்கும் பாடல் வாயிலாக உணர்த்திவிட்டுக் காழிப் பிள்ளையார் மதுரை புறப்படுகிறார். சமணர் செய்த தீமைகள் அவரைத் துன்புறுத்தவில்லை என்ற செய்தியைத் தெரிவித்தபின் பேராசிரியர் நம் வாழ்க்கையில் நாளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/29&oldid=856236" இலிருந்து மீள்விக்கப்பட்டது