பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

翼宽擎 திருவாவடுதுறை இறைவனை வேண்டித் தம் தந்தையார் வேள்வி செய்வதற்காகப் பொற்கிழியினைச் சம்பந்தர் பெற்ற செய்தியினை, காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஆரர்க் கம்பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே (4. 55: 1) என்னும் திருநாவுக்கரசரின் பாடல்கொண்டு தெளிவு படுத்துவர். திருநீலகண்ட யாழ் ப் ப ண ரு - ன் சம்பந்தர் திருவெருக்கத்தம்புலியூரை அடைந்தபோது இப்பதி அடியனேன் பதி' எனப் பாணர் கூறக் காழிப்பெருந்தகை, 'ஐயர் நீர் அவதரித்திட்ட இப்பதி அளவில் மாதவம் முன் செய்தது எனச் சிறப்பித்துரைத்தார். இந்கழ்ச்சியைச் சுட்டும்போது கண்ணன் துரது சென்ற ஞான்று, தன் மனைக்கு வந்ததும் விதுரன் நீ எய்தற்கு என்ன மாதவம் செய்தது இச்சிறு குடில் என்று இயம்பியதை ஒப்பிட்டுக் காட்டுதல் நயமுடைத்து (பக். 35). நல்லூர்ப் பெருமணத் தில் திருஞான சம்பந்தருடன் அன்பர்களெல்லாம் பேரொளி யிற்கலந்து வீடுபேறுற்ற செய்தியை உரைக்கும்போது, கொள்ளை கொள்ள விடுதவிக் கூற்றைப் பிடர்பிடித்துத் தள்ளும் திருஞான சம்பந்தா என்னும் சிவப்பிரகாச சுவாமிகளின் நால்வர் நான்மணி மாலைப் பகுதியைப் பொருத்திக்காட்டுவது இன்பந் தருவதாகும் (பக். 314). நாயன்மார்களின் செயல்களை விளக்கும்போது உலகியல் நிகழ்ச்சிகளைப் பொருத்திக் காட்டுவது சுவை பயக்கின்றது. திருநாவுக்கரசர் தம்மைக் காணும் பொருட்டுக் காழிப்பதியின் எல்லையில் வந்தனைந்தார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/28&oldid=856213" இலிருந்து மீள்விக்கப்பட்டது