பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiv சித்தத்தில் கொண்ட காரணத்தால் விஷ்ணுசித்தர் என்று பெயர் பெற்றார் என்ற செய்தியையும் தொடர்பு படுத்துவர் (பக்.1). சிதம்பரத்தைச் சைவர்கள் கோயில் என்று வழங்குவதைச் சுட்டும்போது வைணவர்கள் திருவரங்கத்தைக் கோயில் என்று வழங்குவது போல என்று காட்டுவர் (பக். 34). சிவபெருமான் நந்தன் தன்னைச் சேவிப்பதற்கு நந்தியை விலகச் சொன்னதற்குத் தென் திருப்பேரைநகரில் பெருமாள், பிள்ளைகள் விளையாட்டைக் காண்பதற்குக் கருடனை விலகச் சொன்னதை ஒப்பிடுவர் (பக். 77). சம்பந்தர் பல பதிகளையும் வணங்கித் தில்லைக் கூத்தரிடம் வந்து சேர்ந்ததைச் சொல்லும்போது எங்கும் சுற்றி அரங்கனைச் சேர்ந்தது போல என்பர் (பக்.303). சண்பைவேந்தர் "எனதுரை தனதுரையாக நீறணிந்து ஏறுகந்தேறிய நிமலன்’ என்று பாடிய அடிகளுக்கு ஒப்புமையாக என்னைத் தன்னாக்கி, என்னால் தன்னை இன்தமிழ் பாடிய ஈசனை (திருவாய் 7.9:1) என்றும், என்சொல்லால் பான்சொன்ன இன்கவி என்பித்துத் தன்சொல்லால் தான்தன்னை கீர்த்தித்த மாயன்." (டிெ 7.9:2) என்றும் நம்மாழ்வார் அருளியதைக் காட்டுவர். (பக். 326) ஞானசம்பந்தர் தேவாரத்தில் வரும் செய்திகளைப் பிறர் பாடிய தேவாரப் பாடல்கொண்டு வவியுறுத்துவது பேராசிரியரின் ஆழ்ந்தகன்ற புலமையினைக் காட்டும். திருக்கோலக்காவில் புகலிப் பிள்ளையார் பொற்றாளம் பெற்ற செய்தியை,

  • நாளும் இன்னிசையால் தமிழ்பரப்பும்

ஞானசம்பந் தனுக்கு உலகவர்முன் தாளம்ஈந்தவன்பாடலுக் கிரங்கும் தன்மையாளனை. (7. 62: 8) என்னும் நம்பியாரூரரின் பாடலால் வலியுறுத்துவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/27&oldid=856190" இலிருந்து மீள்விக்கப்பட்டது