பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxiii மீண்டுசிவ நெறியடையும் விதியினாலும் வெண்ணிறு வெப்பகலப் புகலி வேந்தர் தீண்டியிடப் பேறுடையன் ஆதலாலும் தீப்பிணியைப் பையவே செல்க' என்றார். --திருஞான. புரா: 705. என்ற இப்பாடலைத் தழுவிப் பாண்டிமா தேவியின் மங்கல நாணைப் பாதுகாத்தற் பொருட்டும், அமைச்சர் குலச்சிறையார் மன்னன்பால் வைத்த அன்பினைக் கருதியும், பாண்டியன்பால் அபராதம் உறுதலை எண்ணியும், அவன் திரும்பவும் சிவநெறியில் சேர்தற்குரிய நற்பேற்றினை நினைந்தும் பிள்ளையார் தீப்பிணியினைப் பையவே செல்க' எனப் பணித்தருளினதாகக் கூறுவர் சேக்கிழார் பெருமான் எனப் பேராசிரியர் எடுத்துக் காட்டுவது நயமுடைத்து (பக். 208). நனிபள்ளியைப் பாடிய பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் முதலிரண்டடி பாலைப் புனைவாகவும் பின்னிரண்டடி நெய்தலும் மருதமும் கலந்த புனைவாகவும் உள்ளன. பாலையாக இருந்த நண்பள்ளி என்னும் பதி பதிகம் பாடியபின் வளமுடையதாக மாறியது என்பதற்குப் பல இலக்கியச் சான்றுகள் உள்ளன. எனினும், இந் நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெருமான் குறிப்பிடவில்லை என்று பேராசிரியர் எடுத்துக் காட்டுவது அவர்தம் இலக்கிய ஒப்பு நோக்குக்குச் சிறந்த சான்றாகும். பேராசிரியர் திருமாவிடமும் ஈடுபாடுடையவராதலின் நாயன்மார்களின் வரலாறு கூறும்போதும் திருமாலைப் பற்றிய கருத்துக்களைத் தொடர்புபடுத்திக் காட்டுவர். ஞானசம்பந்தரது தந்தையார் சிவபெருமானது திருவடியை நினைந்து போற்றும் தவப்பெருஞ் செல்வ ராதலின் சிவபாத இருதயர் என வழங்கப்பட்டார் என்று கூறும்போது அடிக்குறிப்பில் பெரியாழ்வார் திருமாலையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/26&oldid=856167" இலிருந்து மீள்விக்கப்பட்டது