பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxii 3ஆம் இயலிலும், அப்பர் பெருமானுடன் வழிபட்ட நிகழ்ச்சிகளை 8ஆம் இயலிலும், விரித்துரைப்பர். கழுமல. நிகழ்ச்சிகளை 4ஆம் இயலிலும், விழிமிழலை நிகழ்ச்சிகளை 9ஆம் இயலிலும், மதுரை மாநகர அற்புதங்களை 19ஆம் இயலிலும் குறிப்பிடுவர். பெருமண நல்லூரில் திருமணம் செய்து கொண்டு பேரொளியிற் கலந்து வீடுபேறு எய்திய, செய்தியை 15ஆம் இயலிற்கூறி இறுதியாக அமைந்த 16ஆம் இயலில் ஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பாடல்கள் குறித்து அருளிச் செயல்கள் என்னும் தலைப்பில் விளக்குவர். திருஞானசம்பந்தர் அருளிய தேவாரப்பாக்கள் சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணம் முதலிய வற்றைத் துணையாகக் கொண்டு ஆளுடைய பிள்ளையாரின் வரலாற்றினை எளிய இனிய நடையில் பேராசிரியர் தொடர்புபடுத்தி எடுத்துக் காட்டுவர். தலப்பயணத்தைக் குறிப்பிடும்போது அவ்வத்தலத்தில் பாடியருளிய சில இனிய பாசுரங்களைத் தேர்ந்தெடுத்துக் காட்டுவர். ஆதலால் இந்நூல் வரலாறு அறிவதற்கு மட்டும். துணையாகாமல் தேவாரப் பாக்களை அறிந்துகொள் வதற்கும் துணையாகின்றது. சில தேவாரப் பாடல்களுக்குச் சேக்கிழார் தரும் விளக்கங்களை ஆங்காங்கே பேராசிரியர் இயைத்துக் காட்டுவது படிப்போருக்கு நல்விருந்தாக அமைகின்றது. அமணரிட்ட தீத்தழல் போய்ப் பையவே சென்று. பாண்டியற்காகவே" எனத் திருஞானசம்பந்தர் பணித்தார். டையவே சென்று எனக் கூறுவதன் நோக்கமறிந்து சேக்கிழார் ஒரு பாடலில் விளக்கம் அளிக்கின்றார். பாண்டிமா தேவியார் தமது பொற்பிற் பயிலுகெடு மங்கலநாண் பாதுகாத்தும் ஆண்டகையார் குலச்சிறையார் அன்பினாலும் அரசன்பால் அபராதம் உறுதலாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/25&oldid=856147" இலிருந்து மீள்விக்கப்பட்டது