பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi மகளின் இன்னல் தீர்க்க அப்பதியிறைவனைப்பாடி மாய்ந்த அவ்வணிகனை உயிர்பெறச் செய்தார். திருவிழிமிழலையில் பஞ்சத்தைப் போக்க இறைவனிடம் படிக்காசு பெற்றார். திருமறைக் காட்டில் மறைக் கதவு அடைக்கப் பாடினார். பின் மதுரையம்பதி ஏகி ஆலவாய் இறைவனை இறைஞ்சிச் சமணர்களை அனல்வாதம் புனல் வாதங்களில் வென்றார். வெப்பு நோயால் துன்புற்ற கூன்.பாண்டியனைத் திருநீற்றுப் பதிகம் பாடி உய்யச் செய்தார். கொள்ளம்பூதூரில் இடத்தைக் கட்டவிழ்த்து அதன்கண் அடியார்களை ஏற்றிக் கொண்டு திருப்பதிகம் பாடிக் கரை கடந்தார். போதிமங்கையில் புத்தர்களை வாதில் வென்றார். திருவோத்துனரில் ஆண் பனைகளைப் பெண் பனைகளாக மாற்றினார். காஞ்சி, காளத்தி முதலிய தலங்களை வணங்கிப் பின் மயிலை சென்று அங்கு எலும்பைப் பெண்ணாக்கினார். திருமணக்கோலத்தோடு நல்லூர்ப் பெருமணக் கோயிலை எய்தி அங்குத் தோன்றிய பேரொளியில் அன்பர்கள் அனைவருடனும் இரண்டறக் கலந்தார். இவையே சம்பந்தப் பெருமான் வாழ்க்கையின் சிறப்புக் கூறுகளாகும். ஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றைப் பதினாறு இயல்களாகப் பகுத்துக் கொண்டு பேராசிரியர் சுப்பு ரெட்டியார் அவர்கள் நயம்பட விளக்கிக் காட்டுவர். முதலியல் ஆளுடைய பிள்ளையாரின் பிறப்பும் வளர்ப்பும் பற்றிக் கூறுகிறது. அடுத்தது அவர்தம் கன்னித் திருத்தலப் பயணத்தைக் கட்டுரைக்கும். பின் சோழ நாட்டுத் திருத்தலப் பெரும் பயணம் 5, 7, 12 ஆம் இயல்களிலும், கொங்குநாட்டுத் தலவழிபாடு 6ஆம் இயலிலும், பாண்டி நாட்டுத் திருத்தல வழிபாடு 11ஆம் இயலிலும், நடுநாட்டுத் தலவழிபாடு 13ஆம் இயலிலும், தொண்டை நாட்டுத் தலப் பயணம் 14ஆம் இயலிலும், விரிவாகப் பேசப்படுகின்றன. ஞானசம்பந்தர் தம் தலப்பயணங்களில் திருநீலகண்ட யாழ்ப்பாணருடன் சென்று பாடியிறைஞ்சிய நிகழ்ச்சிகளை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஞானசம்பந்தர்.pdf/24&oldid=856122" இலிருந்து மீள்விக்கப்பட்டது